பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
595

New Page 1

பரத்தையிற் பிரிவு

பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
        குப்பெற்ற பெற்றியினோ
    டிறுமாப் பொழிய இறுமாப்
        பொழிந்த இணைமுலையே.

373

25.23 நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்

   
நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தையர்வசம் புனலாடவிட்டுச் சூடுவாரின்றிச் செப்பின்கணிட்டடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள் இஃதவனுக்குத்தகாத பழியாமெனக் கருதி நாணி அதனை மறைத்திருந்தமை கண்ட தோழி, இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியையுடையனவாயிருந்தனவென அவள் நலத்தை மிகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

374. வேயாது செப்பின் அடைத்துத்
        தமிவைகும் வீயினன்ன
    தீயாடி சிற்றம்பலமனை
        யாள்தில்லை யூரனுக்கின்

_____________________________________________________________

வழுகை. பயன்: பரத்தையது சிறுமையுணர்த்துதல், அவ்வகை பரத்தைகூறிய வஞ்சினம் தன்பாங்காயினாராற்கேட்ட தலைமகள் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப இவ்வகைசொன்னாளென்பது.

373

25.23.  மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
       நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.

   
இதன் பொருள்: வேயாது செப்பின் அடைத்துத் தமி வைகும் வீயின் அன்ன - சூடாது செப்பின்க ணிட்டடைப்பத் தனியே வைகும் பூவைப்போலும்; தீயாடி சிற்றம்பலம் அனையாள் - தீயின் கண்ணாடுவானது சிற்றம்பலத்தை யொப்பாள்; தில்லை ஊரனுக்கு இன்று ஏயாப்பழி என நாணி-தில்லையூரனுக்கு இன்று தகாதபழியாமெனக்கருதி நாணி; என்கண் இங்ஙனே மறைத்தாள் - தனதாற்றாமையை என்னிடத்தும் இவ்வண்ணமே மறைத்தாள், அதனால், இவள் கற்பு யாய் ஆம் இயல்பு - இவளது கற்பு நமக்குத் தாயாமியல்பையுடைத்து; இயல்புகள் நல் பால - இவளுடைய நாணமுதலாகிய வியல்புகள் நல்லகூற்றன எ-று.