பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
596

New Page 1

பரத்தையிற் பிரிவு

றேயாப் பழியென நாணியென்
        கண்ணிங்ங னேமறைத்தாள்
    யாயா மியல்பிவள் கற்புநற்
        பால வியல்புகளே.

374

25.24 பாணன் வரவுரைத்தல்

   
பாணன் வரவுரைத்தல் என்பது நாணோடு தனியிருந்து வருந்தாநின்ற தலைமகளுக்கு, இராப்பொழுதின்கட் சென்று திசையைக் கடக்கும் வாவல் இரைதேருங்காலமன்மையாற் பகற்பொழுதின்கணுறையும் மரம் போலும் தமியோமை யறியாது விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம் பாட வந்து நின்றாரெனத் தோழி பாணன்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

375. விறலியும் பாணனும் வேந்தற்குத்
        தில்லை யிறையமைத்த
    திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
        றார்சென் றிராத்திசைபோம்

__________________________________________________

தமிவைகும்வீ அக்காலத்தினிகழ்ந்த வேறுபாட்டிற்குவமை. அம்பலம் இயற்கை நலத்திற்குவமை. பாணனுரைத்ததென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளது பெருமையுணர்த்துதல்.

374

25.24.  இகல்வே லவனகல் வறியாப் பாணனைப்
       பூங்குழன் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது.


   
இதன் பொருள்: விறலியும் பாணனும் - விறலியும் பாணனும்; தில்லை இறை அமைத்த திறல் இயல் யாழ் - தில்லை யிறையாலமைக்கப்பட்ட வெற்றி யியலும் யாழை; வேந்தற்குக் கொண்டு வந்து நின்றார் - நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம் பாடக் கொண்டுவந்து நின்றார்கள்; அறல் இயல் கூழை நல்லாய் - அறல் போலுங் கூழையையுடைய நல்லாய்; இராச்சென்று திசைபோம் பறல் இயல் வாவல் - இராப்பொழுதின்கட் சென்று திசையைக் கடக்கும் பறத்தலாகிய வியல்பினையுடைய வாவல்; பகல் உறை மா மரம் போலும் தமியோமை அறிந்திலர் - இரைதேருங் காலமன்மையாற் பகற்