பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
597

பறல

பரத்தையிற் பிரிவு

    பறலியல் வாவல் பகலுறை
        மாமரம் போலுமன்னோ
    அறலியல் கூழைநல் லாய்தமி
        யோமை யறிந்திலரே.

375

25.25 தோழியியற் பழித்தல்

   
தோழியியற் பழித்தல் என்பது பாணன் வரவுரைத்த தோழி, இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால் எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலனெனத் தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

376. திக்கின் இலங்குதிண் டோளிறை
        தில்லைச்சிற் றம்பலத்துக்
    கொக்கின் இறக தணிந்துநின்
        றாடிதென் கூடலன்ன

_______________________________________________________________

பொழுதின்கணுறையும் பெரியமரம்போலும் இராப்பொழுதிற்றுணை யில்லாதோமை இவரறிந்திலர் போலும் எ-று.

    வெற்றி - வீணைகளுட்டலையாதல், “எம்மிறை நல்வீணை வாசிக்குமே” (நாவுக்கரசர் தேவாரம். தனித்திருவிருத்தம். பொது-7) என்பவாகலின் இறையமைத்த யாழென்றார். சென்று பகலுறை மாமரமென் றியைப்பினு மமையும். பறத்தல் பறலென இடைக் குறைந்து நின்றது. போலவென்பது பாடமாயின், பகலுறையு மாமரம் போலத் தமியேமாகிய நம்மையெனவுரைக்க. மன்னும் ஓவும்; அசைநிலை. மெய்ப்பாடு: அது. பயன்: பாணனும் விறலியும் வரவுணர்த்திச் சிவப்பாற்றுவித்தல். என்னை? இவர் வந்துநின்றதற்குத் தலைவி நம்மை இவர் நகையாடிவந்தாரென்று முனிந்தாளாகத் தோழி இவரவன் செயலை யறிந்தாரல்லரென்றும், தலைவர்க் கியல்பு நம்மிடத்து வருதலும் அவரிடத்துச் சேறலு மெனவும் இயல்பு சொல்லுதலாற் சிவப்பாற்று வித்தாளாம்.

375

25.25.  தலைமகனைத் தகவிலனெனச்
      சிலைநுதற்பாங்கி தீங்குசெப்பியது.


   
இதன் பொருள்: திக்கின் இலங்கு திண் தோள் இறை - திக்கின்கண் விளங்காநின்ற திண்ணிய தோள்களையுடைய விறைவன்; தில்லைச்