|
அக
பரத்தையிற்
பிரிவு
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே.
376
25.26 உழையரியற்பழித்தல்
உழையரியற்பழித்தல் என்பது தோழி
தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்பக் கேட்டு, தன்மாட்டன்புடை நெஞ்சத்தையுடைய விவள்பேதுற
இதற்குப் பரியாமையின் வயலூரன் வரம்பிலனென உழையர் அவனை யியற்பழித்துக்கூறா நிற்றல். அதற்குச்
செய்யுள்-
377. அன்புடை நெஞ்சத் திவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
றாடி யிருஞ்சுழியல்
_____________________________________________________________
சிற்றம்பலத்துக் கொக்கின் இறகது
அணிந்து நின்றாடி - தில்லையிற் சிற்றம்பலத்தின்கட் கொக்கி னிறகதனை யணிந்து நின்றாடுவான்;
தென் கூடல் அன்ன - அவனது தெற்கின்க ணுண்டாகிய கூடலை யொக்கும்; அக்கு இன் நகை இவள் நைய
அயல்வயின் நல்குதலால் - அக்குமணிபோலும் இனியநகையை யுடைய இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால்;
நின்றசெவ்வேல் எம் தனி வள்ளல் - எல்லாரானுமறியப்பட்டு நின்ற செவ்வேலை யுடைய எம்முடைய
வொப்பில்லாத வள்ளல்; இன்று தக்கிருந் திலன் - இன்றுதக்கிருந்திலன் எ-று.
அயல்வயி னென்பதற்குப் பொருணசை
யுள்ளத்தராகலிற் காமத்திற் கயலென்றுரைப்பினுமமையும். தலைமகனது தகவின்மையென்பதூஉம். பாடம்.
376
25.26. அரத்தவேல் அண்ணல்
பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது.
இதன் பொருள்: அடியார்
என்பிடை அமிழ்து வந்து ஊற - அடியவ ரென்புகளிடையே அமிழ்தம் வந்தூற; அம்பலத்து நின்றாடி
|