|
தன
பரத்தையிற்
பிரிவு
தன்பெடை நையத் தகவழிந்
தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே.
377
_______________________________________________________________
இருஞ் சுழியல் - அம்பலத்தின்கண்ணே
நின்றாடுவானதுபெரிய சுழியலின் கண்; தன்பெடை நையத் தகவு அழிந்து - தன் பெடை வருந்தத் தகுதிகெட்டு;
அன்னம் சலஞ்சலத்தின் வன்பெடைமேல் துயிலும் - அன்னஞ் சலஞ்சலத்தினது வலியபெடைமேற் கிடந்துறங்கும்;
வயல் ஊரன் - வயலாற் சூழப்பட்ட ஊரையுடையவன்; அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற - தன் மாட்டன்பையுடைய
நெஞ்சத்தை யுடைய இவள் மயங்காநிற்ப இதற்குப் பரியாமையின்; வரம்பு இலன் - தகவிலன் எ-று.
அன்புடை நெஞ்சத்திவளென்றதனால்,
பரத்தையர தன் பின்மை கூறப்பட்டதாம். இருஞ்சுழியலூரெனவியையும். சுழியலென்பது ஒரு திருப்பதி.
வன்பெடை யென்றதனாற் பரத்தையரது வன்கண்மை விளங்கும். ஒருசொல் வருவியாது பேதுறுதலான் வரம்பிலனென்றுரைப்பாருமுளர்.
உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த நகை. பயன்:
தலைமகனை யியற்பழித்துத் தலைமகளை யாற்றுவித்தல்.
377
|