|
25
பரத்தையிற்
பிரிவு
25.27 இயற்பட மொழிதல்
இயற்பட மொழிதல் என்பது
தலைமகனை யியற்பழித்தவர்க்கு, அன்று நம் பொருட்டாக நம்புனத்தின் கண்ணே மாந்தழை யேந்தி
வந்தார் இன்று என்னெஞ்சத்தின்கண்ணார்; அது கிடக்க, மறந் துறங்கினேனாயின் அமளியிடத்துவந்து
என்பயோதரத்தைப் பிரியாதார்; இத்தன்மையாரை நீங்கள் கொடுமை கூறுகின்ற தென்னோ வெனத்
தலைமகள் அவனை யியற்பட மொழியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
378. அஞ்சார் புரஞ்செற்ற
சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும்
நீங்கார்
நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
டோவெம் பயோதரமே.
378
__________________________________________________
25.27. வரிசிலை யூரன் பரிசு
பழித்த
உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது.
இதன் பொருள்: அஞ்சார்
புரம் செற்ற சிற்றம்பலவர் அம்தண் கயிலை - இறைவனென்று உட்காதாருடைய புரங்களைக் கெடுத்த
சிற்றம்பலவரது அழகிய குளிர்ந்த கயிலைக்கண்; மஞ்சு ஆர் புனத்து - மஞ்சார்ந்த புனத்திண்கண்;
அன்று மாந்தழை ஏந்தி வந்தார் அவர் நனவு என் நெஞ்சார் - அன்று மாந்தழையை யேந்திவந்தாராகிய
அவர் இன்று நனவின் என்னெஞ்சத்தின்கண்ணார்; விலக்கினும் நீங்கார் - யான் றடுப்பினும் அவ்விடத்தினின்று
நீங்கார்; கனவும் உண்டேல் - துயலு முண்டாயின்; பஞ்சு ஆர் அமளி எம் பயோதரம் பிரிதல் உண்டோ
- பஞ்சார்ந்த வமளிக்கண் எம்பயோதரத்தைப் பிரிதலுண்டோ! நீர் கொடுமைகூறுகின்றதென்! எ-று.
அஞ்சார் தறுகண்ணரெனினுமமையும்.
தழையேந்திவந்தாரென்பதனை முற்றென்று, இளிவந்தன செய்து நம்மைப் பாதுகாத்தார் இன்றிவ்வா
றொழுகுவரென் றுரைப்பினு மமையும். கனவு முண்டேலென்பதற்குத் துயில்பெற்றுக் கனாக்காணினென்றுரைப்
பினுமமையும். எனது நெஞ்சாரென்பதூஉம், ஊரனைப் பரிசுபழித்த
|