New Page 1
உரைமாட்சி
சொற்களின் திரிந்த வடிவம் :
சில சொற்கள் வடிவு திரிந்து வழங்குதலைக்
கண்டு, இன்ன சொற்கள் இவ்வாறு திரிந்தன என்று எடுத்துக் காட்டுவர் இவ்வுரையாசிரியர்.
அளவியை யார்க்கும் அறிவு அரியோன்
10 என்பதில் துறவு துறவி என நின்றாற்போல அளவு அளவி என நின்றது என்பர். இரவில் வந்து மீளி
உரைத்தி 151 என்பதில் மீடல் என்பது மீளி என நின்றது ; மருடல் வெகுடல் என்பன மருளி வெகுளி
என நின்றாற்போல என உரைப்பர்.
செய்யுள் விகாரங்கள் முதலியன :
செய்யுள் இன்பத்தையே சிறப்பாகப்
போற்றி வரும் வலித்தல் முதலிய அறுவகை விகாரங்களையும், வழங்கற்பாடேபற்றிப் பெயர்ச்சொற்களிடத்து
வரும் மூவகைக் குறைகளையும், விதியின்றி வரும் புணர்ச்சியில் விகாரங்களாகிய தோன்றல், திரிதல்,
கெடுதல், நீளல், நிலைமாறுதல் ஆகியவற்றையும் சொற்களின் உண்மை வடிவறிந்து பொருள் காண
உதவும் வகை இவ்வாசிரியர் எடுத்துக் காட்டுவர். வகைக்குச் சில.
நற்பகல் சோமன் 168 என்ற தொடர்
விகாரவகையால் நற்பகற்சோமன் என வலிந்து நின்றது. அங்கட்டிகழ் மேனி 384 என்பது அங்கண் திகழ்மேனி
என மெலிந்து நின்றது. போர்த்தரு அங்கம் 187 என்பது போர்த்தரங்கம் என்று தொகுக்கும் வழித்தொகுத்து
நின்றது. ஒல்லைக் கண்டிட 214 என்பது விகார வகையால் வல்லெழுத்துப் பெறாது ஒல்லை கண்டிட என
வந்தது. எவ்வம் செய்து 358 என்பது எவம் செய்து என இடைக் குறைந்தது. பறத்தல் இயல் வாவல்
375 என்பது பறல் இயல்வாவல் என இடைக்குறைந்தது. சோத்தம் 173 என்பது சோத்து எனக் கடைக்குறைந்தது.
மல்லல் 178 என்பது மல் எனக் கடைக்குறைந்தது. வாயின் 10 என்பது வயின் என நின்றது. அணி 53
என்பது அண் எனக்குறைந்தது. வாமம் 263 என்பது வாமாண்கலை என இடைக்குறைந்தது. செல்ல அரிது 264
என்பது கடைக்குறைந்து செல்வரிது என்றாகியது.
இடைச் சொற்கள் :
பாடல்களில் பயிலும்
இடைச்சொற்களைச் சுட்டி அவற்றின் பொருள்களை எடுத்துக்காட்டும் இவ்வுரையில் சிறப்பான சிலவற்றைக்
காண்போம். நின்று என்பது 34 ஐந்தாம் வேற்றுமைப் பொருள் உணரநிற்பதோர் இடைச் சொல்.
மீட்டு அது அன்றேல் 57-மீட்டு என்பது பிறிதும் ஒன்று உண்டு என்பதுபட வினைமாற்றாய்
|