பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
61

உரைமாட்சி

சின்மழலைக்கு 104 என்பது சின்மழலைத் திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது எனினும் அமையும் என்றும், சூழ்பொழிற்கே 161 என்னும் நான்கன் உருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் இருந்தேமை 280 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும், சின்மொழியை 343 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் பரிசினின் நிற்பித்த 286-ஐந்தாவது ஏழாவதன் பொருட்கண் வந்து சிறுபான்மை இன்சாரியை பெற்று நின்றது என்றும் வடிக்கு 291 என்னும் நான்காவது, வடியின் என்னும் ஐந்தாவதன் ஒப்புப்பொருட்கண் வந்தது என்றும் விளக்குதல் காண்க.

வினைஎச்சம் எதிர்மறைவினை கோடல்: 

மறைவினைகள், தொழிற்பெயர்கள் இவற்றின் முதனிலைகள் எப்பொழுதும் உடன்பாட்டுவினைகளாகவே இருத்தலின், வினைஎச்சங்கள் எதிர்மறை வினையின் முதனிலையாகிய உடன்பாட்டு வினையைக் கொண்டு முடிந்தன என்று கூறல் சான்றோர் மரபாகும். அம்மரபைப்பற்றி இவ்வுரையாசிரியர் வரைந்தவற்றுள் சில.

துப்புற என்னும் வினையெச்சம் 26 தந்தின்று என்பதன் தருதலொடு முடிந்தது. ஒருவிக்கெடாது 65 - ஒருவி என்னும் வினையெச்சம் கெடாது என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் கெடுதலொடு முடிந்தது. அறிய என்னும் வினையெச்சமும், சிறிது என்னும் வினையெச்சமும் 41 திறவாவிடின் என்னும் எதிர்மறையில் திறத்தலொடு முடிந்தன.

சினைவினை முதலியன: 

உரையாசிரியர் 116 ஆம் பாடலுரையில் சினைவினை முதல் மேல் ஏறி நின்றன என்றும், 126 ஆம் பாடலுரையில் சினை தன்வினைக்கு ஏலா எழுத்துக் கொண்டது என்றும், 103 ஆம் பாடலுரையில் சினை வினை முதல்மேலேறியும், இடத்து நிகழ் பொருளின் வினை இடத்துமேல் ஏறியும் நின்றன என்றும், 222 ஆம் பாடலுரையில் சினைவினையெச்சம் முதல் வினையோடு முடிந்தது என்றும் இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின் மேல் ஏறிநின்றது என்றும் சினைவினையும் இடத்து நிகழ் பொருளின் வினையும் கொள்ளும் முடிபுபற்றிக் கூறியுள்ளார்.

வினையெச்சம், வினைமுற்று, ஒருமைஉருபு, பன்மையுருபு பொதுவினை பற்றிய சில செய்திகள்: 

முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16-