பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
63

New Page 1

உரைமாட்சி

சேற்றிற்பங்கயம் போல என்றும், மலைச்சிலம்பா 128 - சிலம்பன் என்பது அதனை உடையான் என்னும் பொருள் நோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது என்றும் கூறுவர்.

ஓரிடச் சொல் வேறிடத்து வருதல்: 

படர்க்கைச் சொல் முன்னிலையிலும் தன்மையிலும், தன்மைச்சொல், முன்னிலையிலும், இந்நூலுள் வந்துள்ளமையை எடுத்துக் காட்டிச் செல்கின்றார் உரையாசிரியர்.

92ஆம் பாடலுரையில் அண்ணல் என்பது நீ என்னும் பொருளில் முன்னிலைக் கண்ணும், கொடிச்சியர் என்பது நாங்கள் என்னும் பொருளில் தன்மைக்கண்ணும் வந்தன என்றும் 164ஆம் பாடலுரையில் நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத்தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது என்றும் காட்டுவன அதற்குச் சில சான்றுகள்.

நுட்பமான இலக்கண விளக்கங்கள் : 

இவ்வுரையாசிரியர் நுட்பமான இலக்கணச் செய்திகளை நூல் நெடுக ஆட்டாண்டு வழங்கியுள்ளார். அவற்றுட் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

குற்றியலுகரத்தின் மேல் உயிரேறி முடியுமாகலின், 34ஆம் பாடலுரையில் நின்றதுவே என்புழி வகரம் சந்தம் நோக்கி வந்தது விரிக்கும்வழி விரித்தலின் பாற்படும். 286ஆம் பாடலுரையில் பாலன் என்பது பெண்பாலை உணர்திய பால்மயக்கம் அதிகாரப்புறநடையால் கொள்ளப்படும். 66ஆம் பாடலுரையில் மைஏர் குவளைக்கண் என்பதில் ஏர் குவளை என்னும் இயல்பு, புறனடையாற் கொள்க. 56ஆம் பாடலுரையில் பேதையரே என உயர்திணைப் பெயர் சிறுபான்மை ஏகாரம் பெற்று விளி ஏற்றது. (இன்மை என்ற ஒன்றே உண்மை, உடைமை என்ற இரண்டற்கும் மறுதலையாய் வருவது). 245ஆம் பாடலுரையில் தீங்கையிலா என்புழி இன்மை உடைமைக்கு மறுதலையாகிய இன்மை. 25ஆம் பாடலுரையில் நோக்கிற்கு என்னும் நான்காவது நோக்கினால் என மூன்றாவதன் பொருளில் வந்தது. 264ஆம் பாடலுரையில் செல்வரிது என்பது செல்வுழிக்கண் என்பது போல மெய்யீற்று உடம்படு மெய். (மெய்யீற்று உடம்படுமெய் என்பது நச்சினார்க்கினியருக்கும் உடன்பாடாகும்.)

இறையனார் களவியலுரைச் செய்திகள்: 

பேராசிரியர் பாடற் செய்தியைக் கிளவி என்றே குறிப்பிடுவர். கிளவித் தலைப்புக்களும், நூற்பாக்களும், கொளுக்களும் தமக்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றியமையின், அவற்றிற்கு விளக்கம்