பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
642

New Page 1

அருஞ்சொற்பொருள் அகராதி

        பாட்டு எண்
  காரென்று - கறுத்து 109
  கால் - காற்று 24
      இடம் 126
  காவி - நீலப்பூ 41
  கான் - நறுநாற்றம் 126
  கானக்கடம் - கானகத்தை யுடைய சுரம் 335
 

கி

 

 

 
  கிண்கிணி வாய் கொள்ளுதல் - போதாகி நிலைமையை விட்டு மலராம் நிலைமையை அடைந்து சிறிதே மலரத் தொடங்குதல் 123
  கித்தம் - விரைவு, செய்யப்பட்டதென்னும் பொருளாதோர் வடமொழித் திரிபு 388
  கிழித்தது - அங்காந்தது 72
  கிளை - ஆயத்தார் 6
 

கீ

 

 

 
  கீடம் - புழு 129
  கீழும் - கிழிக்கும் 249
 

கு

 

 

 
குட்டன் - பிள்ளை 224
  குடுமி - உச்சி 62
  குணம் - குணமாகிய ஆனந்தம் 9
  குதர்தல் - கோதுதல் 369
  குதலைமை - விளங்காமை 104
  குயம் - முலை 198
  குரம்பை - குடில்-வீடு 251
  குரல் - கொத்து 119
    - கழுத்து 239
  குரு - நிறம் 1
  குரைகழல் - ஒலிக்கும் கழல் 33
  குலதெய்வம் - நல்ல தெய்வம் 29
  குலம் - சாதி 36
  குலவுதல் - குவிதல் 108
  குலா - வளைதலையுடைய 266
  குழல்தலைச்சொல்லி - குழலிடத்துச் சொற்போலும் சொல்லை உடையாய் 206
  குழி - குழீஇ-திரண்டு 135
  குழை - இலை, காதணி 184
  குறிப்பு - கருத்து 80
  குன்றங்கிடை - குன்றக் கிடப்புக்களையுடைய சுரம் 268
 

கூ

 

 

 
  கூடம் - மன்றாகச் செய்யப்பட்ட      தேவ கோட்டம், மேல் மூடப்பட்ட இடம் 129
  கூடின் - திரண்டுவரின்,கிட்டின் 216
  கூய் - கூவி 30
  கூழின் மலிமனம் - உணவால் செருக்கும் மனம் 322
  கூழை - கூந்தல் 375
  கூளி - பேய் 151
 

கெ

 

 

 
  கெடக் கொண்டது - கெடுத்தது 138
  கெர்ப்பம் - கருக்கொளல் 267
  கெழி - (கைழீஇய) பொருந்திய,(கெழுமு) பொருந்து 135
  கேழ் - உவமை, ஒப்பு 269