பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
643

அருஞ்சொற்பொருள் அகராதி

        பாட்டு எண்
 

கொ

     
         
  கொக்கு - மாமாமரம் 103
  கொங்கு - பூந்தாது 100
  கொடி - காக்கை, மூதேவியின் கொடி 235
  கொடுஞ்சிலை - வளைந்த சிலை 101
  கொடும்பாடு - கொடுமை 90
  கொண்டல் - மேகம் 124
          கீழ்காற்று 290
  கொந்து - கொத்துமாலை, பலவாய ஒன்றாகிய மாலை 391
  கொல் - கொல் தொழில் 231
  கொலாம் - இடைச்சொல் கொல் ஈறு திரிந்தது 20
  கொழுமீன் - ஒரு சாதி மீன் 188
  கொற்றவன் - வெற்றியையுடையான் 13
  கொன் - அச்சம் 175
          ஒரு பயன் கருதாமை 298
 

கோ

     
  கோட்டம் - வணங்குதல் 156
  கோடு - பிறை  
  கோடும் - கொள்வேம் 93
  கோப்பு - சீர் அமைப்பழகு 161
          அலங்காரம் 196
  கோபம் - இந்திரகோபம்,முனிவு 327
  கோம்பி - ஓந்தி 21
  கோலம் - அழகு 27
  கோலாப்பிரசம் - வைக்கப்படாததேன் 110
  கோலாற்பிரசம் - கோல்தேன் 110
  கோவை - கொவ்வைக்கனி 200
 

     
  சங்கம் - சங்கு, பற்று 85
  சந்தம் - மறை-வேதம், நிறம்,ஓசை 78
  சரதம் - மெய் 57
  சலக்கென்ப - சலக்கு என விழுவன 57
 

சா

     
  சாந்து - திருநீறு 75
  சால்பு - அமைதி 25
 

சி

     
  சிக்கனவு - திண்ணனவு-உறுதி 343
  சிந்தாகுலம் - சிந்தையின் மயக்கம் 12
  சில்லோதி - நுண்ணிய கூந்தலைஉடையாள் 196
  சிலபல - பத்தெட்டுள என்பது போலத் துணிவின்மை யுணர்த்திற்று 134
  சிலிர்த்தல் - குத்திட்டு நிற்றல் 185
  சிவந்த - வெகுண்ட 209
  சிவநகர் - ஒரு திருப்பதி சிற்பம்-நுண்தொழில் 305
  சிறை - காவல் 20
         சிறகு 82
  சிறைக்கண் - காவலிடத்து 258
  சின்னப்படும் - பொடிபடும் 334
  சின்னெறி - சிறியநெறி 54
  சினம் - உள்ளமிகுதி 74
  சினை - கோடு 154
  சீர் - அழகு 1