பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
65

உரைமாட்சி

ஏனைய பாடல்களில் தனி மெய்ப்பாடுகளே கூறப்பட்டுள்ளன. “கண்ணினும் மனத்தினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரிப்பின், நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” (தொல். பொருள். மெய்ப்பாடு. 27) ஆதலின், இங்ஙனம் மெய்ப்பாடுகளைக் கூர்த்து உணர்ந்து பாடல் தோறும் தெரிவித்தல் இவ்வுரையாசிரியருடைய நுண்மாண் நுழை புலத்தை நுவல்வதாகும். அகப்பொருள் கோட்பாடுகளை நன்கு மனத்துட்கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் பயன் வரையும் திறத்திலும் இவர் நுண்ணறிவு புலப்படுகிறது.

இறைச்சி : 

பாடலிற் பயிலும் பொருட்புறத்ததாகும் இறைச்சியிற் பிறக்கும் பொருளினைத் திறத்தியல் மருங்கின் தெரிந்துரைக்கும் பேராசிரியர் திறத்தினை 96 ஆம் பாடலுரையில் காண்கின்றோம். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கும் நாடன் ஆதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தாய் என்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாததனையும் அஞ்சும் நிலமாகலின் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாம் அஞ்சுதல் சொல்ல வேண்டுமோ என்பது இறைச்சி எனினும் அமையும்.

உள்ளுறை : 

அகப்பொருளுக்கு மிக இன்றியமையாத பொருள் உள்ளுறை ஆகும். இவ்வுள்ளுறை உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் இவ்வுரைகாரர் உள்ளுறை உவமம் என்ற பெயரை 99, 128, 377 ஆம் மூன்று பாடல்களின் உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். ஏனைய இடங்களில் உள்ளுறை என்றே குறிப்பிட்டுள்ளவை சுட்டு என்ற உள்ளுறையில் அடங்கும் போலும், ஏனை உவமம் உள்ள இடத்து இந்நான்கடிப் பாடல்களில் உள்ளுறை உவமம் அமைவது இன்று என்பது இவர் கருத்தாகும். (182).

99 ஆம் பாடலுரையில் மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய வற்றைக் கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல அவள் உயிர் வாழ்தற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மனமகிழ்விப்பாயாக என உள்ளுறை உவமம் காண்க என்றும்.

128 ஆம் பாடலுரையில், யாவருமறியா இவ் வரைக்கண் வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்று எல்லாரும் காணத் திசைதிசை பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டால் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படாநின்றது என