உள
உரைமாட்சி
உள்ளுறையுவமை ஆயினவாறு கண்டு
கொள்க என்றும், 377ஆம் பாடலுரையில் உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது என்றும் கூறியுள்ளார்
133, 159, 168, 250, 252,
254, 260, 265, 276, 369, 381 ஆகிய பாடலுரைகளில் உள்ளுறைகள் காணப்படுகின்றன. இவை சுட்டு
என்னும் உள்ளுறையின் பாற்படலாம். ஆனால், இவை எவ்வுள்ளுறையைச் சாரும் என்பதனைப் பேராசிரியர்
தெளிவாகக் குறிப்பிட்டிலர்.
யாப்பு :
யாப்பு அமைதிக்கு ஏற்ற பாடவேறுபாடுகளையே
பேராசிரியர் தமது உரையில் குறிப்பிட்டிருத்தலின் இவர் யாப்புப்பற்றித் தெளிவான கருத்துடையர்
ஆதல் பெறப்படும்.
அணி :
தொல்காப்பிய உரையாசிரியராகிய
பேராசிரியருக்கு உவமம் என்பது அணியன்று. செய்யுள் உறுப்புக்களுள் உவமமும் ஒன்றே என்பதும், அது
பொருள் புலப்பாட்டிற்காகவே கொள்ளப்படும் என்பதும் அவர் கருத்து. இப்பேராசிரியருக்கு உவமம்
என்பதும் ஓர் அலங்காரம். தமது உரையில் உவமம் பற்றிய ஐயுறவுகளை நீக்குவதனோடு ஏனை அலங்காரங்களுள்
சிலவற்றையும் ஒரோவழி இவர் குறிப்பிட்டுள்ளார்.
உவமைக்கு உவமை ஆகாமை 124,
162ஆம் பாடலுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. 301ஆம் பாடலுரையில், பிரித்து உவமை ஆக்காது இவரது
கூட்டத்திற்கு அவற்றது கூட்டத்தை உவமையாக அமைப்பினும் அமையும் என்று விளக்கம் அளிக்கிறார்.
244ஆம் பாடலுரையில் இல்பொருள் உவமையையும், 162ஆம் பாடலுரையில் புகழுவமையையும்
சுட்டுகின்றார்.
ஏனை அலங்காரங்களில்
157ஆம் பாடலுரையில் அலங்காரம்: எதிர்
காலக் கூற்றிடத்துக் காரியத்தின் கண் வந்த இரங்கல் விலக்கு, உபாயவிலக்கு என்றும், 161ஆம்
பாடலுரையில் அலங்காரம்:
பரியாயம் என்றும,்185 ஆம் பாடலுரையில் அலங்காரம்:
அல்பொருள்
தற்குறிப்பேற்றம்
என்றும், 217ஆம் பாடலுரையில் அலங்காரம் : கூற்றிடத்து இருபொருட்கண் வந்த உயர்ச்சி வேற்றுமை
என்றும், 289ஆம் பாட்டுரையில் அலங்காரம்: பரியாயம்: பொருள் முரணுமாம் என்றும், 233ஆம்
பாட்டுரையில், நோக்கு என்னும் அலங்காரமாய்ப் பாம்பிற்கு அஞ்சும் மயில் என இல்குணம் அடுத்து
வந்தது என்பாரும் உளர் என்றும், 234ஆம்
|