பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
67

உரைமாட்சி

பாடலுரையில் அலங்காரம்: முயற்சி விலக்கு என்றும் இவ்வுரையாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அலங்காரங்களை எடுத்துக் காட்டிய இவ்வுரையாசிரியர் ஏனோ அவற்றை விளக்கிப் பாடலில் பொருத்திக் காட்டிற்றிலர்.

சிறப்பான உரைப் பகுதிகள் :

கிளவித் தலைப்புக்களுள் இருவயின் ஒத்தல், வற்புறுத்தல், பொழில் கண்டு மகிழ்தல், முன்னுறவுணர்தல், வேறுபடுத்துக் கூறல், விரவிக் கூறல், வஞ்சித்துரைத்தல், உட்கொளவினாதல், ஏதங்கூறி மறுத்தல், பெரும்பான்மை கூறி மறுத்தல், கூறுவிக்குற்றல், வருமது கூறி வரைவு உடன்படுத்தல், ஐயுற்றுக் கலங்கல் முதலியவற்றின் விளக்கம் கோவையின் பொருளுணரப் பெரிதும் உதவும்.

இவர் இரண்டு உரைகள் வரைந்துள்ளமையை 23, 25, 38, 52, 90, 91, 95, 97, 116, 118, 120, 129, 131, 140, 146, 151, 166, 170, 183, 185, 189, 204, 225, 235, 276 முதலிய பாடல்களில் காணலாம்.

இவருடைய நயமான உரை 1, 5, 8, 9, 10, 12, 14, 24, 25, 27, 28, 32, 33, 36, 39, 40, 42, 48, 50, 54, 57, 58, 60, 61, 64, 66, 70, 76, 77, 83, 84, 86, 108, 109, 118, 122, 123, 125, 136, 137, 150, 154, 156, 158, 197, 205, 210, 225, 226, 231, 235, 242, 258, 261, 276, 279, 281, 285, 298, 328, 352, 354, 365, 381, 394, முதலிய பாடல்களில் காணப்படுகிறது.

உரையாசிரியர் பெருமை :

கோவை நூல்களுள் திருச்சிற்றம்பலக்கோவையார் தலையாய நூலாகத் திகழ்வது போலக் கோவை நூல் உரைகளுள் பேராசிரியர் உரை தலையானதாகத் திகழ்கிறது. நச்சினார்க்கினியர், பரிமேலழகர், முதலிய பேருரையாளர் வரிசையில் இந்நூலுரை யாசிரியராகிய பேராசிரியரும் இடம் பெறத்தக்கவர் என்பது உறுதி. இவர் பெருமையைத் திருக்கோவையார் உரையாக வெளிவந்துள்ள பழைய உரையோடு ஒப்பிட்டு உணரலாம்.