பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
70

New Page 1

ஆராய்ச்சியுரை

கோவையாரின் மூலம் கொளுக்களுடன் பிலவ வருடம் ஆடி மாதம் வெளிவந்தது. அதன் முகப்புப் பக்கத்தின் படிவம் கீழே தரப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்.

திருக்கோவையார்

என்கின்ற

திருச்சிற்றம்பலக்கோவையார்

வேதாந்தசித்தாந்தசைவசமயாசாரியராய்

திருவாதவூரி லெழுந்தருளியிருந்த

மாணிக்கவாசக சுவாமிகள்

திருவாய்மலர்ந்தருளியது.

இஃது

அச்சிற் பதிப்பித்திருக்குந் திருவாசகத்தோடியைபுற்றிருக்க வேண்டுமாதலா லேட்டுப் பிரதிகளிற் பாடந்தோறு மொன்றற் கொன்றொவ்வா மற்றுகள்களாற் பொதிவுற்றிருத்தலினத்துகள்களை நீக்கிச் சுத்தபாடமாக வழங்குவிக்கும் பொருட்டுச் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவராகிய

புதுவை

நயநப்ப முதலியாரால்

ஆதீன வித்துவான்க ளிடத்தி லிருந்து பலபிரதிகளை வருவித்து நச்சினார்க் கினியாருரைக் கிணங்கினதாகப் பரிசோதித்துப்-பிலவஸ்ரீ வருஷம் ஆடிமீ திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் குமார ராகிய கந்தசாமியையரது கல்வி விளக்க அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது.