இந
ஆராய்ச்சியுரை
இந்நூலின் பதிப்பாசிரியர் புதுவை
நயநப்ப முதலியார் (நயநப்ப முதலியார் என்றால் கண்ணப்ப முதலியார் என்று பொருள். மாணிக்கவாசகரை
வெள்ளியம்பலத் தம்பிரான் அரதனவாக்கிய அடிகள் என்று குறிப்பிப்பர்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளை அவர்கள் முதன் முதலில் (1841-1842) சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் சென்னைக்
கல்விச் சங்கத்தின் புலவர்களுள் ஒருவராக பு. நயநப்ப முதலியாரும் பணிபுரிந்து வந்தனர். இது பற்றிய
குறிப்பு, தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் வரைந்த திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களின் சரித்திரம் (பாகம்-1) என்ற நூலில் பக்கம் 56இல் காணக் கிடைக்கிறது.
பு. நயநப்ப முதலியார் புதுவை நயநப்ப
முதலியார் என்பவரே. அக்காலத்தில் ஒருவர் பெயருக்கு முன்சேர்க்கப்படும் எழுத்து அப்பெயருக்கு
உரியாரின் ஊரைக்குறிக்கும் முதல் எழுத்தாகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிதம்பரம்பிள்ளையின்
மகனாவார். அவருடைய ஊர் திரிசிரபுரம். ஆகவே அவர் தி. மீனாட்சிசுந்தரம் என்றே கையெழுத்துச்
செய்வார். (மேற்படி நூல், பாகம் இரண்டு, பக்கங்கள் 292, 294 காண்க,)
முதன்முதலில் திருக்கோவையாரை
உரையோடு பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரே. நூன்முகப்பில், “மதுரையாசிரியர்
பாரத்துவாசி நச்சினார்க்கினிய ருரையோடு இராமநாதபுர ஜமீந்தாரவர்களின் மாநேஜராகிய மஹராஜ
ராஜஸ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால்
பலபிரதி பேதங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னப் பட்டணம் முத்தமிழ் விளக்க வச்சுக்
கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது” என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வெளிவந்த ஆண்டு ரௌத்திரி என்றும்,
மாதம் ஐப்பசி என்றும் முகப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்பதிப்பு வெளிவந்த ஆண்டு
1860 ஆகும். இவ்வாண்டில் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யருக்கு வயது ஐந்தே.
பேராசிரியர் உரையே நச்சினார்க்கினியர்
உரை என்று ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டது. நாவலர் வெளியிட்ட கோவை பல பதிப்புக்கள் பெற்றது.
நச்சினார்க்கினியரே உரையாசிரியர் என்ற குழப்பம் நாவலர் நூலின் மூன்றாம் பதிப்பு வரை
நீடித்தது.
|