அன
ஆராய்ச்சியுரை
அன்பர் தி. வே. சீனிவாசனிடமிருந்து
கிடைத்த, பிரமாதி ஆண்டு ஆடித்திங்கள் வெளிவந்த மூன்றாம் பதிப்பைப் பார்வையிட்டபோது, அப்பதிப்பின்
முகப்புப் பக்கத்தில் நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில்
ஒட்டப்பட்டிருக்கும் சிறிய தாளில் “இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியர தென்பர்,
முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்”
என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
நான்காம் பதிப்பை வெளிக் கொணர்ந்தவர்
விசுவநாதபிள்ளை ஆவார். இப்பதிப்பு (1922) துந்துபி ஆண்டு புரட்டாசி மாதம் வெளிவந்தது. இதன்
முகப்பிலிருந்து நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும்
சிறிய தாளில் “இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியரதென்பர், முற்காலத்து அறிஞர்
பலர் நச்சினார்க்கினியரதென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்” என்று
அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு ஒரு முக்கிய செய்தி கூறப்படல்
வேண்டும். நான்காம் பதிப்பின் சில படிகள் அச்சாகிவிட்ட நிலையில் அச்சடிப்பதை நிறுத்திவிட்டு,
முகப்புப் பக்கத்தின் பின்பக்கத்தில் உரைபற்றி மேலே கூறப்பட்ட செய்தியை ஏற்றியுள்ளனர்.
துண்டுத் தாளில் அச்சிட்டு ஒட்ட வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு அச்சுப்பணி தொடர்ந்திருக்கிறது.
அச்சாகிவிட்ட படிகளில் மாத்திரம் ஒட்டுவேலை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
நூலின் ஐந்தாம் பதிப்பு (1932)
ஆங்கிரச ஆண்டு ஆவணி மாதம் வெளி வந்தது. இதை வெளியிட்டவர்கள் சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்கள் ஆவர். சென்னை வித்தியானுபாலன யந்திர சாலையில் இப்பதிப்பு அச்சிடப்பட்டது.
இப்பதிப்பிலும், வீ. பொன்னுஸ்வாமி அவர்கள் (1954) ஜய ஆண்டு, ஆவணி மாதத்தில் வெளியிட்ட
ஆறாம் பதிப்பிலும் உரைபற்றிய விவரம் 4ஆம் பதிப்பில் தரப்பட்டபடியே நூல் முகப்பின் பின்பக்கத்தில்
அச்சிடப்பட்டிருக்கிறது. நூலின் ஏழாம் பதிப்பு (1957) துன்முகி ஆண்டு, மாசி மாதம் வெளி வந்தது.
பதிப்பாசிரியர் ச. பொன்னுசுவாமி அவர்கள்.
ச. பொன்னம்பல பிள்ளையவர்களின்
மாணாக்கர் சி. தம்பையா பிள்ளை (1894) ஜய ஆண்டு ஐப்பசி மாதம் திருச்சிற்றம்பலக்
|