பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
73

New Page 1

ஆராய்ச்சியுரை

கோவையாருண்மை என்ற நூலை வெளியிட்டார். இப்பதிப்புப் பற்றிய குறிப்புக்களைப் பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணையில் காணலாம்.1

இந்நூல் வெளிவரச் சென்னை வித்துவான் ம. தணிகாசல முதலியார் அவர்களும், சிந்தாதிரிப்பேட்டை கொ. சண்முகசுந்தர முதலியார் அவர்களும் தங்களிடத்தில் இருந்த பிரதிகளைத் தந்து உபகரித்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இந்நூலின் கண் ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாகப் பேரின்பக் கிளவி என்ற கொளுவும், சிற்றின்பக் கிளவி என்ற கொளுவும் தரப்பட்டுள்ளன. நூலை இங்ஙனம் சுவடியில் அமைத்து வைத்தவர் இன்னார் என்பது தெரியவில்லை என்று ஒரு குறிப்பும் இந்நூலுள் உள்ளது.

சிற்றின்பக் கிளவிக்குப் பேராசிரியர் உரை வரைந்திருக்கிறார்.

திருவாசகத்திற்குச் சீகாழித் தாண்டவராயர் என்பார் இயற்றிய திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம் (முதற் பகுதி) 1954இல் வெளிவந்தது. இந்நூலின் பதிப்பாசிரியர் ரா. விசுவநாதையர், தமிழ்த் தாத்தாவின் மாணாக்கர் ஆவார். தாண்டவராயர் 1834இல் தம் வியாக்கியானத்தை அரங்கேற்றியதாக நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது.

இவ்வியாக்கியானத்தில் “துறையன்பு முதிர்ச்சி” என்று ஒரு பகுதி காணப்படுகிறது. இப்பகுதி “திருச்சிற்றம்பலக் கோவையார் பேரின்பத்துறையனுபூதி உரைக் குறிப்பு விளக்கம்” என்றும் வருணிக்கப்படுகிறது. இதற்கும், திருக்கோவையார் உண்மை என்னும் நூற்பகுதிக்கும் சில வேற்றுமைகள் உள. இவர்தாம் நாயகி பரம்பொருள் என்று முதன்முதலில் கூறியவர்போலும். இவர் கூற்றுப் பின்வருமாறு : “பத்தி முத்திக்கு உவமை பெத்தம், பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து உடம்பையுடைய யோகிகள் பாலுள்ள சிற்றின்பம் அடங்கத் தன் பேரின்பமாக, பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக, சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக.


 1  A catalogue of The Tamil Books In The Library Of The British Museum, Vol. I, Page 167: “MANIKKA-VACHAKAR.....திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை. [Tiru-Chittambala-Kovaiyar-Unmai. A Saiva devotional poem in 400 stanzas with a metrical commentary by Perasiriyar, here described to Nachinarkk’-Iniyar, Edited by N.Ch. Tamb’-aiya Pillai.] PP. vi. 159, v.  சென்னபட்டணம் ஜய [Madras, 1895] 12. பதிப்பாண்டு 1894 என்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.