ந
ஆராய்ச்சியுரை
நாயகன் பக்குவான்மாவாக, தோழி
திருவருளாக, தோழன் ஆன்ம போதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித்தாயாக, மேலும் நாயகம்
கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும் அவை
அநுபூதியாற் காண்க.
“நாயகியைச் சிற்றம்பலம்போல
வருணிக்கையால் நாயகி பரம்பொருளாயிற்று. பெறுவார் நாயகனும், பேறு நாயகியுமாக இரசமும் நாவும்
போல இருத்தலானும், கொத்தும் துறையும் கருப்பொருளும், உரிப்பொருளும் இடமும் எல்லாம் அருளின்ப
மெனக் கொள்க,” 2
திருச்சிற்றம்பலக் கோவையார்
உண்மை என்ற நூலைச் சுவாமிநாத பண்டிதரும் பதிப்பித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
“இதனை அச்சிடுங்காலத்துத்
‘திருக்கோவையார் உண்மை’ என்னும் சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பதிப்பும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து
தேசிகர் பதிப்பும் மிகவும் துணை செய்தன. இவற்றுள் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பால் கொளுவின்
உண்மைப் பாடங்கள் துணியப் பெற்றன.” இங்ஙனம் ச.தண்டபாணி தேசிகர் கூறியிருப்பதால்3
சிவக்கொழுந்து தேசிகரும் ஒரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார் என்பதும், திருச்சிற்றம்பலக்
கோவையார் உண்மை என்பது திருக்கோவையார் உண்மை என்றும் வழங்கி வந்தது என்றும் அறியலாம்.
1897இல் பேராசிரியர் உரையோடும்,
விசாகப் பெருமாள் ஐயர் வரைந்த விளக்கத்தோடும் திருக்கோவையார் சென்னையில் வெளிவந்ததை
பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணை அறிவிக்கின்றது.
திருச்சிற்றம்பலக் கோவையார்
உண்மையில் இருபத்து ஐந்து கொத்துக்களுக்கான துறைவகைச் சூத்திரங்கள் காணப்படுகின்றன. தாண்டவராயர்
உரையிலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் சாரம் விசாகப் பெருமாள் ஐயரால் வரையப் பெற்றிருக்கிறது4.
அவை
2திருவாசக
அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்,
சென்னை, பக், 149-150.
3திருக்கோவையார்
உண்மை விளக்கம், முன்னுரை, திருவாவடுதுறை ஆதீனம், 1965.
4திருவாசக
அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி 1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்,
சென்னை,. பக். 151 - 154, அடிக்குறிப்புக்கள்.
|