New Page 1
ஆராய்ச்சியுரை
பேராசிரியர் காட்டிய பாடபேதங்கள்
சிலவற்றை இவ்வுரை கொண்டிருந்தது. வடமொழிக் கலப்பும், இதில் சற்றே கூடுதலாகக் காணப்பட்டது.
இவ்வுரையைச் செப்பம் செய்து நல்ல தமிழில் பேராசிரியர் தம் உரையை அமைத்திருக்கலாம் என்று
ஒரு தோற்றம் எழுந்தது. ஆகவே, காலத்தால் பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது இவ்வுரை என்று
கருதப்பட்டது. இவ்வுரை பல இடங்களில் பதவுரையாகவும், சில இடங்களில் பொழிப்புரையாகவும்
வரையப்பட்டிருந்தது. தஞ்சைச் சுவடியில் 281ஆவது பாடலுக்குப் பின் முன்வந்த உரை அழிந்துபட்டிருந்த
படியால், எஞ்சிய பகுதிக்கான உரை பேராசிரியர் உரையைத் தழுவிய பொழிப்பையே கொண்டிருந்தது.
இச்சூழலில், தற்செயலாய் உ.வே.சா
நூல் நிலையத்தில், விடுபட்ட பகுதிகளுக்குள்ள ஒரு சுவடி கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடியின் உதவியால்,
பழைய உரையை ஒருவாறு பதிப்பிக்க (பழைய உரையுடன்) என்ற தலைப்பில் 1951இல் இந்நூல் சரசுவதி
மஹால் நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 11 பக்க அளவில் ஓர் ஆங்கில முன்னுரை
உண்டு, இதில் கிளவிக் கொத்துக்கான ஆங்கில விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் அடிக்குறிப்புக்களில்
தரப்பட்டிருக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை.
1952இல் திருக்கோவையாரைப் பேராசிரியர்
உரையோடு திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியிட்டது. 1960இல் ஸ்ரீகாசிமடம் திருக்கோவையாரைப் பேராசிரியர்
உரையோடும், பழைய உரையோடும் வெளிக் கொணர்ந்தது. இது மீளவும் 1972இல் ஒரு பதிப்புப் பெற்றது.
மூல நூலை மட்டும் 1991இல் காசிமடம் பதிப்பித்தது. இதில் “மூன்றாம் பதிப்பு” என்று ஒரு
குறிப்புக் காணப்படுகிறது.
1965இல் திருக்கோவையார்
உண்மை விளக்கம் என்ற நூல் திருவாவடுதுறை ஆதீன வெளியீடாகத் தமிழ் உலகிற்கு வழங்கப்பட்டது.
பேரின்பக் கிளவிகளுக்கான விளக்கம் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் உரையாசிரியர்
ச.தண்டபாணி தேசிகர் அவர்கள். காழித் தாண்டவராயர் கருத்தை நன்கு விளக்கும் வகையில் அமைந்த
நூலிது. தேசிகர் அவர்கள் “திருவாசகம், மணிவாசகர் தாம் பெண்மையினின்று பேசிய பேச்சுக்கள்,
அநுபவ நிலையிலே நுகர்வான் உயிராகிய தானும், நுகரப்படுகின்ற பொருளாகிய சிவமும் பேரின்பமாக
இருக்கும் பெற்றியைத் திருவுளத்து எண்ணிஉயிராகிய
|