|
இயம
ஆராய்ச்சியுரை
இயம்பிய வனைத்து மைய ரேயினி தெழுதிக்
கொண்டே
நயம்படு கோவை யொன்று நவின்றிட
வேண்டு மென்ன
வயம்படு மவரு முள்ள மகிழ்ந்தனர்
பாடப் பாடச்
சயம்படு மறையோர் தாமும் வரைந்தனர்
சலித்த லின்றி9.
திருவாதவூரர் புராணம் அருளியவர்
கடவுள் மாமுனி என்னும் பெரியோர். இப்புராண மூலத்தை அருஞ்சொற்பொருள் அகராதியுடன் திருநெல்வேலி,
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1923இல் வெளியிட்டது. இப்பதிப்பு மிக அழகுடைத்து.
இப்புராணம்கூடத் திருக்கோவையார் பற்றி ஏதும் விரிவாகக் கூறவில்லை. அம்பலவாணரே திருவாசகத்தையும்
திருக்கோவையாரையும் எழுதி அருளினார் என்ற செய்தி ஒன்றே முனிவராலும் கூறப்பட்டிருக்கிறது.
திருச்சதக முதலாச் சிறந்ததமி
ழறுநூறும்
விரித்தவகப் பொருட்கோவை
விளங்கவொரு நானூறும்
உரைத்தனன்பின் முடிந்தவிடத் துயர்வாத
வூரன்மொழி
தரித்தெழுது மம்பலவ னெழுத்தென்று
சாற்றினான்10.
ஸ்ரீ மாணிக்கவாசக வெண்பா என்ற
நூலை யாத்தவர் மு. கோவிந்தசாமி ஐயர் ஆவார். இந்நூலிலும் கோவையார் பற்றி ஒரே ஒரு பாடல்தான்
உண்டு.
கூறும் துறையமைந்த கோவையொன்று செப்புமென
ஊறுஞ் சுவையொழுக வோர்கோவை-யாறணியுஞ்
சிற்றம் பலத்தாடும் தேவ ருளமகிழச்
சொற்றனரன் பூறத் தொடுத்து11.
தை. ஆ. கனகசபாபதி முதலியார் என்பவர்
திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களால் “மும்மொழிப் புலவர்; நாவலா;் பாவலர்; ஓவியர்”
என்று பாராட்டப் பெற்றவர்.
8
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப்
புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 6.
9
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப்
புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) , தில்லையடைந்த
படலம், பாடல் 65.
10
கடவுள் மா முனிவர் இயற்றியருளிய திருவாதவூரர் புராணம்,
கழகம் (1923), திருவடி பெற்ற சருக்கம், பாடல் 531.
11
ஸ்ரீ மாணிக்கவாசக வெண்பா,
மதுரை எக்ஸெல்ஸியர் பிரஸ், 1918, பாடல் 261.
|