பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
82

பட

ஆராய்ச்சியுரை

பட்டிருக்கின்றன. இவ்வோவியங்களை அழியா முறையில் வரைந்தமைத்துத் திருக்கோவையாரென்னும் தமிழ்க்கோயிலை நமக்களித்த மாணிக்க- வாசகனார்க்கு நாம் எத்தகைக் கைம்மாறு செலுத்த வல்லேம் ! உரிய கைம்மாறும் உலகில் உண்டோ? அத்திருக்கோயிலை முறைப்படி வழிபட்டு விடுதலை பெற முயல்வதே அவர்க்கு நாம் செலுத்தும் கைம்மாறாகும்.

மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கராகிய வித்துவான் தியாகராசச் செட்டியார், திருக்கோவையார் நானூறு பாடல்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். சீவக சிந்தாமணியைத் தமிழ்த் தாத்தா ஆய்வு செய்து வந்த காலத்தில் தமக்கு விளங்காத மேற்கோள்களைத் தனியே குறித்து வைத்திருந்தார். ஒரு சமயம் செட்டியார் அவர்களிடம், அவை பற்றி அவர் வினவிய போது, “விளங்காத மேற்கோள்களில் திருக்கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலிருந்து சொன்னார்” (என் சரித்திரம் (1997) பக்கம் 562இல் காண்க.) “தேவார திருவாசகங்களிலும் இவருக்கு (செட்டியாருக்கு) விருப்பம் மிகுதி. திருக்கோவையார் முற்றும் இவர் ஞாபகத்தில் இருந்தது” என்று உ. வே. சா. அவர்கள் செட்டியாரைப் போற்றுகிறார். (வித்துவான் தியாகராசச் செட்டியார் (1992) பக்கம் 103 காண்க.)

ஆத்திசூடிக்கு அகலவுரை கண்ட ஒரத்தூர் கோ. வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள், விரும்புவோர்க்குத் திருக்கோவையாரைப் பாடஞ் சொல்லுதலைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார்.

சுந்தரம் பிள்ளை என்ற ஐயாற்று அன்பர், திருக்கோவையார் என்று சொன்னாலே சிலிர்த்துப் போவார். அவர் திருக்கோவையாரைப் ‘பாக்களின் சக்கரவர்த்தி’ என்று கூறிப் போற்றி வந்தார்.

பலர்புகழ் திருக்கோவையாரை நிறுத்துப் பார்த்து அதன் மதிப்பை அறுதியிட்டுச் சொல்ல நம்போலியரிடம் தராசும் இல்லை, படிக் கற்களும் இல்லை. அறிவால் எட்டமுடியாததை அநுபூதி ஒன்றே இறையருளால் எட்டும். திருக்கோவையாரைத் தாழ்ந்து பணிந்து வணங்கிப் போற்றுதல் சைவரின் கடமை.

பட்டுக்கோட்டை வக்கீல் வி. வெங்கடேச்வர ஐயர் என்பார் “ஆவுடையார் கோவிலென வழங்கும் திருப்பெருந்துறை விளக்கம்” என்ற நூலின் ஆசிரியர். இந்நூலிலும் “திருவாசகம் திருக்