பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
83

New Page 1

ஆராய்ச்சியுரை

கோவையார் இவைகள் இவர் (மாணிக்கவாசகர்) பாடியவே” என்ற ஒரே குறிப்பு மட்டும் உள்ளது12.

திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம்12என்ற நூலை மதராஸ் ரிப்பன் பிரஸ் 1942இல் அச்சில் கொணர்ந்தது. வடமொழியிலிருந்து இந்நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் ஆசிரியர் கி. சுந்தர சாஸ்திரிகள் என்பவர். இந்நூலிலும் திருக்கோவையாரை, “வாதவூரர் சொல்லச் சுவாமி தம் திருக்கரத்தால் எழுதினார்” என்றே உள்ளது. ஆவுடையார் கோயிலை இவர் ஆளுடையார் கோயில் என்றே கூறுகிறார். சிவபெருமானை ஆளுடை வள்ளல் என்று இவர் வருணிக்கிறார். வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல்மூலம் நாம் அறியக் கூடிய செய்தி இதுவே. மணிவாசகரைப் பற்றிய வடமொழி நூல்களிலும் திருக்கோவையார் பற்றிய செய்தி மிக அருகியே காணப்படும்.

கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதிய மணிவாசகப் பெருமான் என்ற நூலைக் கழகம் 1928இல் வெளியிட்டது. இதில் எட்டுப்பக்க அளவில் திருக்கோவையார் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வரையப்பட்டிருக்கும் கட்டுரையில் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. மணிவாசகரைப் பற்றிய பட்டயம் ஒன்று மலையாளத்தில் உள்ளது. இதன் மூலத்தைத் தமிழ் எழுத்திலும், இதற்கான தமிழ் மொழி பெயர்ப்பையும் பிள்ளையவர்கள் தம் நூலில் தந்திருக்கிறார்14. இது சைவருக்கும், கிறித்துவர்க்கும் இடையே தோன்றிய வழக்குப் பற்றியது. இதில் சம்பந்தப்பட்ட மாணிக்கவாசகர் வேறு ஒருவர் என்று நிச்சயமாகக் கூறலாம்.

மணிவாசகர் சரித்திரம் என்ற நூலை ஆக்கியவர் பி. ஸ்ரீ. ஆசாரியார் ஆவர்15. இது 1929இல் வெளிவந்தது.. இந்நூலில் திருச்சிற்றம்பலக் கோவை பற்றிய செய்திகள் சில கூறப்பட்டுள்ளன.

இராவ் பகதூர் தணிகைமணி டாக்டர் வ. சு. செங்கல்வராய


12. திருப்பெருந்துறை விளக்கம், ஸ்ரீ நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை, 1925, பக்கம் 49.

13. திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை, 1942, பக்கம் 234.

14. மணிவாசகப் பெருமான், கழக வெளியீடு 102, 1928, பக், 120-124.

    15. மணிவாசகர் சரித்திரம், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, பக். 143-150.