|
க
ஆராய்ச்சியுரை
காட்டப்பட்டிருக்கின்றன.
கல்லாடாம் என்ற நூலின் “செய்யுட்கள்
சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும்
இருக்கின்றன; சொல் செறிவுடையன; பொருள், புராணக் கலப்புடையது. திருவாதவூரடிகள் அருளிய திருக்கோவையாரின்
நலத்தை உலகம் அறியச் செய்வதற்காக, அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்து ஒவ்வொரு துறைக்கும்
ஒவ்வோர் ஆசிரியப்பா இயற்றி, தமிழறியும் பெருமானாகிய ஆலவாய் அண்ணலின் தெய்வத்திருமுன்
இவ்வாசிரியர் ஓதியபோது, பாட்டுக்கு உருகும் பனிமலைவல்லிபங்கன், ஒவ்வொரு செய்யுள் முடியும்
போதும், தன் திருமுடியைத் துளக்கி மகிழ்ந்தார் என்று ஒரு பழம் பேச்சு, இந்நூலின் சிறப்பைத்
தெரிவிக்கும் நோக்கத்தோடு, நம் நாட்டில் வழங்கி வருகிறது19.”
யானை, மான் ஆகியவற்றை வியாஜமாகக்
கொண்டு, “இங்கு அவை வந்தனவோ?” என்று கேட்டபடி தலைவன், தலைவியும், பாங்கியும் இருந்த இடத்திற்கு
வந்தனன். மறுமுறையும் ஒரு தடவை அவர்கள் இருந்த இடத்திற்கு வருகிறான். “யாவன் இவன்?” என்று தோழி
ஐயுறுகிறாள்.
“பல்லில னாகப் பகலைவென்
றோன்றில்லை பாடலர்போல்
எல்லில னாகத் தொடேனம்
வினாவியவன் யாவன் கொலாம்”
என்று தோழி ஐயுறுகிறாள். (நாகம்-யானை; ஏனம்-கடுவாய்
(பன்றி).)
“ஏனம் வந்ததா?” என்று வினவிக்
கொண்டு தலைவன் வரவில்லை. ஆகவே பதிப்பாசிரியர், தாம் வரைந்த அடிக்குறிப்பில், “ஏனம்
வினாவியதற்குச் செய்யுளில்லை” என்று கூறியிருக்கிறார்20.
பாடலை ஊன்றிப் பயின்ற தமிழ்த்தாத்தா,
“ஏனம் என்ற பாடம் சரியன்று; ஏணம் என்ற பாடமே சரி21 என்று அறிவித்திருக்கிறார்.
ஏணம் என்றால் மான் என்று பொருள். பிங்கல நிகண்டு காண்க.
19.கல்லாடம்,
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை, 1957, பதிப்புரை.
20.திருச்சிற்றம்பலக்
கோவையார் (பழைய உரையுடன்), தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வெளியீடு, வெற்றிவேல் மின்சார அச்சகம்,
தஞ்சாவூர், 1951, பக்கம் 70.
21.இத்தகவலைப்
பண்டித வித்துவான் தி. வே. கோபால ஐயருக்கு அறிவித்தவர் தமிழ்த்தாத்தாவின் சீடரான வி.
மு. சுப்பிரமணிய ஐயர் ஆவர்.
|