பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
87

New Page 1

ஆராய்ச்சியுரை

கொளு எண் முப்பத்து ஐந்திற்கும் இந்நூலில் உரையில்லை. ‘உரையில்லை’ என்ற செய்தியும் நூலுள் காணப்படவில்லை. முப்பத்து ஐந்தாம் செய்யுளும் உரையும் நூலில் காணப்படுகின்றன. ஆகவே கொளு முப்பத்து ஐந்திற்கான உரை, பதிப்பில் விடுபட்டுவிட்டது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் 39 முதல் 59, 337 முதல் 400 என்ற எண்களைப் பெற்ற பாடல்களுக்கான கொளுக்களுக்கும் உரையில்லை. இச்செய்தியைப் பதிப்பாசிரியரே தந்துள்ளார்.

இந்நூலின் பக்கம் 371 தொடங்கிப் பக்கம் 383 முடிய உள்ள பகுதியில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதி, “காப்பு : எழு கோபுரம்-எழுநிலையை உடைய கோபுரம்.....” என்று தொடங்குகிறது. ஆனால் நூலில் இங்குக் கூறப்பட்ட காப்புச் செய்யுள் இல்லை. மேலும் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என்ற பகுதியை அடுத்து “ஐயரவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பு” (பக்கங்கள் 384, 385, 386) என்று ஒரு பகுதி வருகிறது. இப்படி வந்துவிட்ட குழறுபடையைத் தவிர்த்திருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் நூலை வெளியிட்ட நிலையத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருக்கோவையார் - ஆங்கில நூல்கள் :

கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் “ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்”23என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார். இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப் படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.24


    23. Hymns to the Dancing Siva, Glenn E. Yocum, Heritage Publishers, New Delhi, 1982.

24. மேற்படி நூல், பக்கம் 10. யோகும் அவர்கள் கூறியிருப்பது : “The Tirukkovaiyar is ostensibly an erotic poem, although it has traditionally been interpreted as an allegory of God’s love for the soul. The poem is not an easy one and, as can be imagined, is a far less accessible form or religious literature than the clearly devotional hymns of the Tiruvacakam. In order to discuss the Tirukkovaiyar in the context of a wider study of Manikkavacakar, I would first want to read the book carefully with a pandit, an opportunity I have not had. More thorough examination of the hagiographical literature about Manikkavacakar is also a desideratum.”