|
இவ
ஆராய்ச்சியுரை
இவருக்கு உதவவேண்டும் என்று
கருதியே, நான் திருக்கோவையார் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். என் மொழி பெயர்ப்பின்
ஒரு படியை அவருக்கு நான் நேரில் வழங்கிய போது அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.
தமிழ் இலக்கியம் என்ற நூல், ஆங்கிலப்
பேராசிரியர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அவர்களால் வரையப்பட்டு, 1929இல் வெளிவந்தது.
இதன் மறுபதிப்பு 1985இல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது25. இந்நூலின்
பெருமையைப் பண்பட்ட ஒரு சிலரே உணர முடியும் என்று பிள்ளை அவர்கள் அறிவித்துள்ளார்26.
1930இல் பேராசிரியர் வி. ஆர்.
இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த “தமிழ் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் ஆய்வுகள்”27
என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்நூலில் தீட்சிதர் அவர்கள், மேலெழுந்தவாரியாகப்
படிப்போர் இதனைக் காம நூலாகக் கருதுவர் என்றும், இத்தோற்றம், அற்புதமான எழிலுடைச் சமய உண்மைகளையும்,
கருத்துக்களையும், இலேசாக மூடி நிற்கும் ஒரு போர்வை என்றும் கூறியுள்ளார்28. இந்நூல்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் மறுபதிப்புப் பெற்றுள்ளது.
1937-இல் இலங்கை அரசு, சர்.
பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த, “ஆய்வுகளும் மொழி பெயர்ப்புக்களும்”
என்ற நூலை வெளியிட்டது. 1981இல் இந்நூல்
25.Tamil
Literature, M.S. Purnalingam Pillai,
Tamil University Reprint, Thanjavur, 1985.
26.
மேற்படி நூல், பக்கம் 160: “Thiru-Kovaiyar
or”Thiru-Chittambala Kovaiyar’ whose subject matter is Aham, chiefly is love
furtive and wedded, contains 400 stanzas in Kattalai-Kalithurai metre. It is
called Kovai or Collection, because it strings together twenty-five clusters of
thurais or sub-divisions of the subject. The higher wisdom enshrined in these
verses can be reached only by the cultured few to whom the transitoriness of
this life’s span is patent and who knows that Sivam plays with Atma and produces
many a phenomenon.”
27.
Studies In Tamil Literature And History,
V.R. Ramachandra Dikshitar, London, Luzac and Co., 1930.
28.
மேற்படி நூல், பக்கம் 101: “The other equally remarkable work of his is the
Tirukkovai. Superficial readers devoid of the true spiritual acumen are apt to
treat this supreme mystic work as an ordinary text of love-poetry. True, what is
known in Sanskrit as the Sringara rasa seems at first sight to predominate the
whole poem. But it must be remembered that it is only a thin veil covering grand
and beautiful religious truths and conception.”
|