பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
89

ம

ஆராய்ச்சியுரை

மீளவும் பதிப்பிக்கப்பட்டது29. இந்நூலில் திருக்கோவையார் பாடல்கள் சில, மூலமும், மொழி பெயர்ப்புமாகத் தரப்பட்டிருக்கின்றன. திருவளர் தாமரை என்று தொடங்கும் பாடலும், போதோ விசும்போ என்று தொடங்கும் பாடலும், பாயும் விடையரன் என்று தொடங்கும் பாடலும், அணியும் அமிழ்தும் எனத் தொடங்கும் பாடலும், வளைபயில் என்று தொடங்கும் பாடலும்,  அளவியை யார்க்கும் என்று தொடங்கும் பாடலும், கூம்பலங் கைத்தலத்து என்று தொடங்கும் பாடலும், சிந்தாமணி என்று தொடங்கும் பாடலும், சிறை வான் புனல் என்று தொடங்கும் பாடலும், விழியாற் பிணையாம் என்று தொடங்கும் பாடலும், வடிக்கணிவை என்று தொடங்கும் பாடலும், இருங்களி என்று தொடங்கும் பாடலும், மைவார் கருங்கண்ணி என்று தொடங்கும் பாடலும், அக்கின்றவா என்று தொடங்கும் பாடலும், செந்நிற மேனி என்று தொடங்கும் பாடலும் காகத்திரு கண் என்று தொடங்கும் பாடலும், தாதேய் மலர்க்கு என்று தொடங்கும் பாடலும், வரிசேர்த் தடங்கண்ணி என்று தொடங்கும், தேமென் கிளவி என்று தொடங்கும் பாடலும், அந்தியின் வாயெழில் என்று தொடங்கும் பாடலும், தெங்கம்பழம் என்று தொடங்கும் பாடலும், அருணாசலம் அவர்களால் நன்கு உரைநடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன30. இவை காட்சி, ஐயம், தெளிதல், உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், கிளவி வேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பாங்கன் வினாதல், இயலிடங் கூறல், குறிவழிக் காண்டல், வேழம் வினாதல், பிறைதொழுகென்றல், வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல், மதியு, ம்படுதல், குறிப்பறிதல், மென் மொழியாற் கூறல், தழை கொண்டு சேறல், நீயே கூறென்று மறுத்தல், குலமுறை கூறி மறுத்தல் என்பனவற்றைப் பற்றியவை.

1961 இல் திரு. ஜேசுதாசன், திருமதி. ஜேசுதாசன் ஆகியோர் ஆங்கிலத்தில் வரைந்த தமிழ் இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற நூல் வெளிவந்தது31. சங்க இலக்கிய அகப் பொருள் பற்றிய நூல் திருக்கோவையார் என்றும் இதில் பேசப்படும் காதல் கடவுளுக்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள காதல் என்றும், இந்நூல் தீர்மானமான உருப்பெற்ற ஒன்று என்றும், இது கோவை நூல்களில்


29.Studies And Translations, Philosophical and Religious, Sir Ponnambalam Arunachalam, Ministry of Regional Development, Colombo, 1981

30.  மேற்படி நூல், பக். 259-268.

    31. A History of Tamil Literature, C. Jesudasam and Hephzibah Jesudasan, Y.M.C.A. Publishing House, 5 Russel Street, Calcutta, 1961.