|
த
ஆராய்ச்சியுரை
தலையாய நூல் என்றும் இவ்வாசிரியர்கள்
கூறியுள்ளனர்32.
1963இல் கலைப்புலவர் க. நவரத்னம்
அவர்கள், ஆங்கிலத்தில் வரைந்த “இந்து சமய ஆய்வுகள்” என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது33.
இந்நூலுக்கான முகவுரையை வரைந்தவர் முனைவர் டி. எம். பி. மகாதேவன் அவர்கள். இந்நூலாசிரியர்
நாயக-நாயகி பக்தியை உணர்த்தும் மனோன்னதமான தமிழ்நூல் திருக்கோவையார் என்றும், இஃதோர்
ஞானப் பனுவல் என்றும் கூறுகிறார்34.
தமிழ்ப் பல்கலைக்கழத்தின்
முன்னாள் துணை வேந்தராக இருந்த, திரு ஓளவை நடராசன் அவர்கள், எம்.லிட். விருது பெற, திருக்கோவையாரை
ஆய்விற்கு எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் “திருக்கோவையார் ஆய்வுகள்” என்ற நூலை உருவாக்கினர்35.
சென்னைப் பல்கலைக்கழகம் அவர் ஆய்வுகளை ஏற்றது. 1964இல் இவர் சமைத்த நூல் இன்னமும் அச்சேறவில்லை.
சற்றேறக் குறைய 350 பக்கங்கள் கொண்ட இவ்வாய்வுச் சுவடி, 1964க்குப் பிறகு வெளிவந்திருக்கும்
தகவல்களோடு பதிப்பிக்கப்பட வேண்டும். திருக்கோவையாரின் சிறப்புக்களை வகுத்தும் தொகுத்தும்
நூலாசிரியர் நன்கு காட்டியுள்ளார். திருக்கோவையார் பற்றி முற்றுமாக ஆங்கிலத்தில் முதன்முதலில்
வரையப்பட்டது. இந்நூல். உலகத் தமிழ் மாநாடுகள் பல நடந்துள்ளன. என்றாலும், எந்த ஒரு மாநாட்டிலும்
திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைகூடப் படிக்கப்படவில்லை. ஒளவை நடராசன்
அவர்கள் வரைந்த நூலும் குடத்திலிட்ட விளக்காகவே இருந்து வருகிறது.
1965இல் தெ.பொ.மீனாட்சிசுந்தரன்
அவர்கள் வரைந்த தமிழ
32.
மேற்படி நூல் பக். 86-87 :”Manikka-Vasakar’s works are Tiru-K-Kovaiyar and
Tiru-Vasakam. Tiru-K-Kovaiyar belongs to the Kovia class of verse which treats
of the Sangam olve-themes with this difference, namely, that it reads like a
continuous story. But the love depicted in Tiru-K-Kovaiyar is the love between
God and the soul.....Tiru-K-Kovaiyar has a definite finish of form and stands
first, though not in point of time, among the Kovais.”
33.
Studies in Hinduism by Kalaipulavar K. Navaratnam, Jaffna, Ceylon, 1963.
34.
மேற்படி நூல், பக்கம் 194 :”St. Manickavachakar’s “Tirukovaiyar’ is the most
outstanding composition on the Nayaka-Nayaki bhava devotion in Tamil
language.....(Lt) belong(s) to the Saiva school of Mysticism.”
35.
Studies in Tirukkovaiyar, Thesis submitted for The M. Litt Degree of The Madras
University By D. Natarajan, 1964.
|