பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
91

இலக

ஆராய்ச்சியுரை

இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற ஆங்கில நூல் வெளி வந்தது36. திருக்கோவையார் பற்றி இந்நூலில் சில செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூலாசிரியர் திருக்கோவையார் காட்டும் தலைவி கடவுள் என்றும், தலைவன் ஆன்மா என்றும் கூறியிருக்கிறார்37.

1974இல் கமில் சுவலபில் வரைந்த தமிழ் இலக்கியம் என்ற ஆங்கில நூல் வெளிவந்தது38. தமிழ் இலக்கியத்தை மேனாட்டர் உணர்தற்கு மிகவும் பாடுபட்டார் சுவலயில் அவர்கள், கோவைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி திருக்கோவையார் இவா கூறுகிறார்39.

விஸ்வ பாரதியில் தொன்மை இந்தியச் சரித்திரம் பண்பாட்டுத் துறையைச் சார்ந்த முனைவர் ப்ரடுபாநந்த ஜாஷ் அவர்கள், சைவத்தின் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர். இவ்வாங்கில நூல் 1974இல் வெளிவந்தது40. இஃதோர் அருமையான நூல். கோளகி மடம் பற்றிய பல செய்திகளை இந்நூலில் காணலாம். நீலகண்ட சாஸ்திரியார் கருத்தை ஏற்று, கி.பி. 862 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தவர் மணிவாசகர் என்று இவர் கூறுகிறார். தம் நூலில் திருவாசகம் பற்றியும் திருக்கோவையார் பற்றியும் இவர் குறிப்புக்கள் தருகிறார்41.

கோ. வன்மிக நாதன் அவர்கள் சாகித்ய அகாடெமிக்காக வரைந்த ‘மாணிக்கவாசகர்’ என்ற ஆங்கில நூல் 1976இல் வெளிவந்தது42. புறத்தூண்டுதல் இன்றித் தன் இயல்பாகவே பொழிந்த பாடல்களே திருவாசகமும், திருக்கோவையாரும் ஆக உருக்கொண்டன என்றும், இவ்விரு நூல்களும் இடைச் செருகல் ஏதுமின்றி,


36.A History  of Tamil Literature By T.P. Meenakshisundaram, Annamalai University, Annamalai Nagar, 1965.

37. மேற்படி நூல், பக்கம் 138:”As against the ordinary trend of mystic poetry, in Tiru-K-Kovaiyar the lady lore is God and the hero is the soul.

38. Kamil Veith Zuelebil, TAMIL LITERATURE, Otto Hanassouritz, Wiesbaden, 1974.

39. மேற்படி நூல், பக்கம் 98.

40. History of Saivism by Dr. Pranabananda Josh, Roy and Chaudhury, Calcutta, 1974.

41. மேற்படி நூல், பக்கம் 90.

    42. Manikkavachakar, G. Vanmikanathan, Sahitya Akademi, New Delhi, 1976.