ப
ஆராய்ச்சியுரை
பழுதுபடாமல் நமக்குக் கிடைத்துள்ளன
என்றும், திருவாசகப் பாடல்கள் பற்பல இடங்களில் பற்பல காலங்களில் பாடப்பட்டன. என்றும்,
ஆனால் திருக்கோவையார் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பாடப்பட்டது என்றும் கூறுகிறார்43.
1987இல் அநுபூதிப் பாடல்கள் என்ற
ஓர் ஆங்கில நூல், நார்மன் கட்லர் அவர்களால் இயற்றப்பட்டு வெளிவந்தது44. கட்லர்
அவர்கள் தமிழ் அறிந்தவர். திருக்கோவையார் பாடல்கள் இருபத்தொன்பது இவரால் ஆங்கிலவாக்கம்
பெற்றன. அப்பாடல் எண்களாவன : 1, 2, 3, 6, 8, 11, 20, 23, 70, 71, 75, 102, 109,
115, 120, 144, 166, 178, 248, 250, 287, 289, 292, 304, 315, 324, 335, 341, 34345.
திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில்
கட்டுரைகள் வரைந்தவர் பென்னம்பெரிய சித்தாந்தப் புலவரான கிருஷ்ண சிவராமன் அவர்களே46.
பொன்னே போல் போற்றிப் பயிலப்படவேண்டிய கட்டுரைகள் இவை.
ஒருவாறு வரையறுக்கப்பட்ட வேதாந்த
மரபிற்குப் புறத்தே நின்றும், அதே சமயத்தில் வேதாந்தத்தின் அந்தரங்கமான, சாரமான கோட்பாடுகளைத்
தன்னகத்தே கொண்டதுமான சிவஞான போதம் உருப்பெறக் கோவைப் பாடல்கள் முக்கிய காரணமாக
இருந்தன
43.
மேற்படி நூல், பக். 20-22. “Manikkavachakar is the author of two major works, both
of which have come down to us without mutilation or interpolation. It is more
fitting to sya that he sang two major works than that he was the author of two
such works, for they are spontaneous outpouring of the heart rather than planned
works composed at leisure.....The songs of the Thiruvachakam.....were sung at
various times and various places. The Thirukkovaiyar, on the other hand, it may
be safely guessed, was sung at onetime and at one place.”
44.
Songs Of Experience,
The Poetics Of Tamil Devotion by Norman Cutler, Indiana University Press,
Bloomington and Indianapolis, 1987.
44.
மேற்படி நூல், பக். 150-160.
45.
(I) The Spirituality of Love in the
Saiva Hindu Tradition: The Esoteric
Implications of Tirukkovaiyar, Journal of the International Institute of Saiva
Siddhantha Research, Dharmapura Adhinam, 1987, Vol.3, No.1, PP.1-14.
(2) Ibid. The
Mysticism of Male-Female Relationship. Some Philosophical and Lyrical Motifs of
Hinduism, PP. 46-59.
|