என
ஆராய்ச்சியுரை
என்றும் இவ்வாசிரியர் ஒரு முடிவை
அறிவிக்கின்றார்47.மேலும் அவர் கூறுவதாவது : ‘பெயர் அறிவிக்கப்படாத தலைவன்,
தலைவியர்; இலக்கண மரபிற்கு முற்றும் ஒத்துவரும் அமைப்பு; உண்மையான, மிகவும் நெருக்கமான காதல்;
இப்படிச் சமைக்கப்பட்ட இந்நூலின் பாடல்கள் உலகளாவிய காதல் பேரிலக்கியப் பாடல்கள்’48.
திருக்கோவையார் பாடல் அனைத்தையும்
முதன் முதலில் ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமை இறையருளால் எனக்குக் கிட்டியிருக்கிறது. என்
மொழிப் பெயர்ப்பு 1989இல் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது49.
திருக்கோவையாரை மேனாட்டர் உணர்ந்து ஓதுவதற்காகவே இந்நூல் வெளியிடப்பட்டது. 42 பக்க அளவில்
அமைந்த விரிவான அறிமுகக் கட்டுரை, கற்க விழைவோருக்கு உரிய விளக்கங்கள் வழங்கியிருக்கிறது
ஒவ்வொரு பாடலுக்கும் குறிப்புரை உண்டு, பல நூல்களிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும், ஒப்புமைப்
பகுதிகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மில்டன், ஷேக்ஸ்பியர், வில்லியம்
கூபர், ராபர்ட் பிரௌனிங், வேர்ட்ஸ்வொர்த், எமர்சன், உமார்கய்யாம், ரூமி, கலீல்
ஜிப்ரான், ஹம் போல்ட், வர்ஜில் ஆகியோர் நூற்பகுதிகள் ஒப்புமைக்காக உரிய இடங்களில்
தரப்பட்டிருக்கின்றன. சீனப் புலவர்களான போ சூய், வாங்சங், லிய், லி-போ ஆகியோரின் நூல்களிலிருந்தும்
மேற்கோள்கள் காட்டப்பட்டிருகின்றன. பால்இயல் உள தத்துவ நிபுணரான ஹாவ்லாக் எல்லீஸ் நூல்களிலிருந்தும்
பொருத்தமான பகுதிகள் இம்மொழிபெயர்ப்பில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. எடின்பரோ பல்கலைக்கழகப்
பேராசிரியரும் தமிழ் அறிஞருமான ஆர்.ஈ. ஆஷர் அவர்கள் இம் மொழிபெயர்ப்பிற்கு அணிந்துரை
வழங்கியிருக்கிறார். முறுகிய தெய்வக் காதல் பற்றி நூலே திருக்கோவையார் என்பதை என்னால்
47.
மேற்படி சஞ்சிகை, பக்கம். 14 :”The writer’s own conclusion in this regard, based
on careful study and reflection, is not only in favour of interpreting it as a
text of spiritual love but also as the most significant formative factor that
shaped the twelfth century religio-philosophical text of Civagnanapotham which
standing outside the formal boundary of the normative tradition of Vedanta,
nevertheless enunciated its quintessential doctrine in the form of a philosophy
of love:
48.
மேற்படி சஞ்சிகை, பக்கம். 55 :”This is the tender, intimate love poetry,
anonymous, stylised in accord with strict grammatical convention comprising some
of the greatest love poems ever composed in world literature.”
49.
Tirukkovaiyar,
translated by Sekkizhar Adi-p-Podi T.N. Ramachandran, Tamil University,
Thanjavur, 1989.
|