பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
95

அவரவர

ஆராய்ச்சியுரை

அவரவர் தகுதி, அறிவு, அநுபூதிகளுக்கு ஏற்பக் காட்சிதரும் பனுவல் உலகில் ஒன்று உண்டு என்றால் அது திப்பிய கிரந்தமாம் திருக்கோவையாரே, இப்படி இதன் பெருமையை அறிவிக்கும் பழைய பாடல் பின்வருமாறு.

ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்}
    காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
    ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
    சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.

-ஆன்றோர் வாக்கு

சிந்தைத் திருக்கோட்டும் சிவகாமவேதம் திருக்கோவையார் இத்திருமுறையை முறையாக ஓதி உய்வோமாக.

எண்ணிறைந்த தில்லை யெழிற்கோ புரந்திகழக்
    கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
    தேனூறு செஞ்சொற் றிருக்கோவை யென்கின்ற
    நானூறு மென்மனத்தே நல்கு.61


    55.திருச்சிற்றம்பலக் கோவை, நயநப்ப முதலியார் பதிப்பு, பக்கம்1, (1841) சில வேறுபாடுகளுடன் இப்பாடல் கழகப் பதிப்பில் அச்சிடப்பட்டிருக்கிறது.