|
|
மூத்தபிள்ளையார்
வாழ்த்து
நேரிசை யாசிரியப்பா
|
|
|
|
5
|
|
திங்கண்முடி
பொறுத்த பொன்மலை யருவி
கருமணி கொழித்த தோற்றம் போல
இருகவுள் கவிழ்ந்த மதநதி யுவட்டின்
வண்டினம் புரளும் வயங்குபுகர் முகத்த
செங்கதிர்த் திரளெழு கருங்கடல் போல |
10
|
|
முக்கண்மேற்
பொங்கும் வெள்ளமெறி கடத்த
பெருமலைச் சென்னியிற் சிறுமதி கிடந்தெனக்
கண்ணரு ணிறைந்த கவுன்பெறு மெயிற்ற
ஆறிரண் டருக்க ரவிர்கதிர்க் கனலும்
வெள்ளைமதி முடித்த செஞ்சடை யொருத்தன் |
15
|
|
உடலுயி
ராட வாடுறு மனலமும்
தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்
ஊழித் தீப்படர்ந் துடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர் |
20
|
|
விழிவிடு
மெரியுஞ் சாபவாய் நெருப்பு
நிலைவிட்டுப் படராது காணியி னிலைக்கச்
சிறுகாற் றுழலு மசைகுழைச் செவிய
ஆம்பன்முக வரக்கன் கிளையொடு மறியப்
பெருங்காற்று விடுத்த நெடும்புழைக கரத்த |
|
|
கருமிடற்றுக்
கடவுளைச் செங்கனி வேண்டி
இடங்கொண் ஞாலத்து வலங்கொளும் பதத்த |