பக்கம் எண் :

272கல்லாடம்[செய்யுள்31]



நாற்றிசை நடக்கும்-நாம் நோக்குகின்ற நான்கு திசைகளினும் உருவெளிப்பாடாகத் தோன்றி நம் கண்முன்னே இயங்காநின்ற; அணங்கின் தெய்வப் பெண்போல்வாளாகிய நங்காதலியின்; கரும்பு உரு தட்டை அ மலை மடல் கடல்திரை உகளுங் குறுங்கயல் மானும் அவயவத்து அருத்தியின்-கரும்பு எழுதப்பட்ட மூங்கிலும் அழகிய மலையும் மலரும் கடலினது அலையுள் திரிகின்ற குறிய கயல்மீனும் ஆகிய இவையிற்றை நிரலே ஒக்கும் தோளும் முலையும் முகனும் கண்ணும் ஆகிய உறுப்புக்களின்பால் உண்டான வேட்கையினாலே; தடைதரும் நெஞ்சம்-என் செலவினைத் தடுக்கின்ற நெஞ்சமே கேள்! என்க.

     (வி-ம்.) அருத்தி-அவா. இதனை அவயவத்து அருத்தியின் எனவும் பின்னுங்கூட்டுக. தலைவன் நோக்கும் திசைதொறும் தன் நெஞ்சங்கவர்ந்த தலைவியின் உருவெளிப்பாடு தோன்றி இயங்குதலின் நாற்றிசை நடக்கும் அனங்கு என்றான். அணங்கு-தெய்வப் பெண் போல்வாள் என்க; என்றது தலைவியை. அணங்கின் கரும்புறுதட்டை மலை மடல் கடற்றிரை யுகளுங் குறுங்கயல் ஆகிய இவற்றை மானும் அவயவத்து அருத்தியின் தடைதரு நெஞ்சம் எனக் கொண்டு கூட்டிக் கொள்க. தட்டை-மூங்கில். அ-அழகு. மடல்-இதழ். இஃது ஆகுபெயராய் மலரைக் குறித்து நின்றது. பின்னரும் சிறப்பால் தாமரையைக் குறித்து நின்றது என்க. தலைவியின் தோளுக்கு மூங்கிலும் மலை முலைகட்கும் மடல் முகத்திற்கும் கடற்றிரை யுகலுங் குறுங்கயல் கண்களுக்கும் உவமை. மானும்: உவம உருபு. தோளில் தொய்யிலாகக் கரும்பு எழுதப்படுதலின் கரும்புறு தட்டை என்றான். அலைதரு கடுங்கான் என ஒட்டுக. இதன்கண் தலைவன் பொருள் செய்யத் தூண்டிய நெஞ்சின் வழிபட்டுத் தலைவியைப் பிரிந்து காட்டினூடே செல்லுங்கால், அத்தலைவியின் தோள் முதலிய உறுப்புக்களின் நலன்களை நினைந்து மேர்செல்லவுந்துணியாமல் மீளவுந் துணியாமல் வருந்துபவன் தன் நெஞ்சை உணர்வுடையதுபோலும் உறுப்புடையதுபோலும் வேறு நிறுத்தி அதனை நோக்கிக் கூறுகின்றான் என்க. இதற்கு,

நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியு விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி”        (தொல். பொருளி. 2)