பக்கம் எண் :

மூலமும் உரையும்273



எனவரும் நூற்பாவால் அமைத்துக் கொள்க. உறுப்பினுள் வைத்துத் தோளும் முலையும் முகமும் கண்ணும் நுகர்ச்சிக்குச் சிறத்தலின் அவற்றையே கூறினான். தலைவியோடு உறையுங்கால் அவளருமை தோன்றாமல் அவளைப் பிரிந்த பின்னர்ப் பொருளாசை குறைந்து அவள்பால் வேட்கையே மிக்கு நிற்றல் மக்களியல்பிற்கு மிகவும் பொருந்துதல் உணர்க.

6-8: கயிலை...............................மதனை

     (இ-ள்) கயிலைத்தென்பால் கானகந் தனித்த தேவர் நெஞ்சு உடைக்கும்-கயிலைமலைக்குத் தென்றிசையிலுள்ள காட்டின்கண் மனைவிமாரைப் பிரிந்து தனித்திருந்து தவஞ்செய்யும் தேவர்களின் நெஞ்சினைப் பிளக்கும்; தாமரையேவின் குணக்கோ-தாமரை முதலிய மலரம்புகளையுடைய காமப் பண்பினையுண்டாக்கும் தலைவனாகிய; மதனை-காமவேளை; மணக்கோல் துரந்த-தன்மேல் மணமுடைய மலரம்புகளைத் தொடுத்தபொழுது என்க.

     (வி-ம்.) தனித்த என்றதனால் மனைவிமாரை நீங்கித் தனித்திருந்த என்றும் கானகந் தனித்த என்றதனால் தவஞ்செய்யும் என்றும் வருவிததோதுக. குணக்கோவாகிய மதனை என்க. குணம்-காமப்பண்பு என்க. மணக்கோல் துரந்தபொழுது என ஒருசொல் வருவித்துக்கொள்க. தாமரையே வினையுடைய குணக்கோ மதனை என மாறிக் கூட்டுக. மலரம்பாகலின் மணக்கோல் என்றான். கோல்-அம்பு.

9-13: திருக்குளம்...................கருதியோ

     (இ-ள்) திருக்குளம் முளைத்த கண்தாமரை கொடு-அழகிய நெற்றியில் தோன்றிய கண்ணாகிய தாமரை மலரைக் கொண்டு; தென்கீழ்த்திசையோன் ஆக்கிய-தென்கீழ்த்திசைக்குரிய காவற்றெய்வமாகிய நெருப்பாக்கிய; தனிமுதல் திருமாமதுரை என்னும் திருப்பொற்றொடி-ஒப்பற்ற இறைவனாகிய சிவபெருமானுடைய செல்வமும் பெருமையும் உடைய மதுரை மா நகரை ஒத்த அழகிய பொன்வளையலணிந்த நங்காதலியின், என் உயிர் அடைத்த பொன் செப்பின் முலை-என்னுடைய உயிரைப் பொதித்து வைத்துள்ள பொற்சிமிழையொத்த முலையின்; அளவு அமர் இன்பங் கருதியோ-நம் அவாவினளவாயமைந்த பேரின்பத்தை நினைத்தோ என்க.

     (வி-ம்.) குளம்-நெற்றி. கண்-நெருப்புக்கண். திருக்குளம் முளைத்த தாமரைகொடு நெருப்பாகிய என்புழி வியப்பணி. தோன்றி இன்புறுத்தலுணர்க, தென்கீழ்த்திசையோன்-தீக்கடவுள்; எனவே மன்மதனை நெற்றிக்கண்ணால் எரியச்செய்தவன் என்பதாயிற்று. மா-பெருமை. மதுரை நகரம் கண்டு கேட்டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்பங்களையும் அரம் முதலிய உறுதிப் பொருள்களையும் தருதல்போல இவளும் ஐம்புலவிபங்களையும் அறத்தையும் வழங்கு கல்.-18