விரித்து ; மணிதிரை
உகைக்கும் கடலினில் கவினி - முத்து முதலிய மணிகளை அலைகளால் ஒதுக்குகின்ற கடலைப்போல
அழகெய்தி ; முள் எயிறு அரவம் முறித்து உயிர் பருகி- முட்போன்ற பற்களையுடைய பாம்புகளை
அலகாற் கொத்தித் துணித்து அவற்றின் உயிர்களைக் குடித்து ; பொள் என வானத்து அசனியின்
பொலிந்து-ஞெரேலென்று வானத்தின் கண்ணதாகிய இடி முழக்கம்போல முழங்கி ; பூதம் ஐந்து
உடையும் காலக் கடையினும் - நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் அழிதற்குக் காரணமான
ஊழி இறுதிக்காலத்தினும் அழியாமல் ; உடல்தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் - உடல்
தளிர்த்து நிலைபெற்ற வலிமை மிக்க மயிலை ஊர்தியாக உடையவனும் என்க.
(வி-ம்.)
குரு - நிறம், மரகதம் போலும் பறை என்க. பறை - இறகு, தழையைப் பரப்பி எனல் வேண்டிய
வினையெச்சத் தீறுகெட்டது எயிறு - பல், முறித்தல் - துணித்தல், உயிர் பருகி என்றது
. கொன்று என்றவாறு, பூதம் ஐந்தும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது. பூதம் ஐந்தாவன
நிலம், நீர், வளி, தீ வெளி என்பன. கடைக்காலம் என்பது காலக்கடை என மாறி நின்றது.
மயிலோன்-மயிலை ஊர்தியாக உடையவன்.
11-15:
புரந்தரன்.........................................காதலர்
(இ-ள்)
புரந்தரன் புதல்வி-இந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரும் ; எயினர் தம்
பாவை - வேடர் மகளாகிய வள்ளி நாய்ச்சியாரும்; இருபால் இலங்க - தன் இண்டு பக்கங்களினும்
விளங்காநிற்ப; உலகு பெற நிறைந்த அருவி அம குன்றத்து - உலகிலுள்ள அடியால் தாம் தரம்
வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளற்பொருட்டு நிறைந்தெழுந்தருளிய அருவி நீரினையுடைய
திருப்பரங்குன்றத்தை; அணி அணி கூடல்-தனக்கு அணிகலனாக அணிந்துள்ள நான்மாடக்வடல்
என்னும் திருப்பகுதிக்கு; இறைவன் - கடவுளும்; பிறையவன்- பிறையை அணிந்தவனும் ; கறைகெழு
மிடற்றேனான் - கறுநிறம் அமைந்த மிடற்றினையுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய ; மலர்க்
கழல் வழுத்தும் நம் காதலர் . செந்தாமரைமலர் போன்ற வீரக் கழலணிந்த திருவடிகளை
இடையறாது நினைந்து வாழ்த்துகின்ற நம் பெருமான் என்க.
(வி-ம்.)
புரந்தரன் - இந்திரன், எயினர் - வேடர், எயினர் பாவை - வள்ளி, தெய்வயானையும்
வள்ளியும் இருபுடையினும் இலங்க எழுந்தருளிய குன்றம் என்க. உலகு: ஆகு பெயர்; உலகில்
வாழும் அடியார் என்க. அடியார் திருப்பரங்குன்றத்தே எழுந்தருளிய இறைவன்பான் தாம்
வேண்டும் வரங்களைப் பெறுவர் என்பதனை.
|