பக்கம் எண் :

மூலமும் உரையும்517



சீறடியவர் சாறுகொள வெழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும் கூறுமிசை முழுவதும்
மணியு்ம் கயிறும் மயிலும் குடாரியும்
பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி
அருவரை சேராத் தொடுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை
வருபுனர் அணிகென வரங்கொள் வோரும்
கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்
ஐயம ரடுகென வருச்சிப் போகும் ”          (பரி-அ, )

எனவரும் பரிபாடலானு முணர்க.

     கூடிலிறைவன் - சோமசுந்தரக்கடவுள், கறை - களங்கம், மலர்க்கழல் ; அன்மொழித் தொகை.

15-20: பாறை..............................................வினைபோல

     (இ-ள்) பாசறை முனைப்பது நோக்கி - பாசறையிலுள்ளோர் எதிர்ப்பதை நோக்கி, வேல் முனை அவிழ் அற்றத்து - வேலினது நுனி உறையினின்றவிழ்ந்த செவ்வியிலே ; பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த-நண்பகற் பொழுதிலேயே மரப் பொந்தினின்றும் வெளிப்பட்ட ; வளை கண் கூர் உகிர் கூக்குரல் மொத்தையை-வளைந்த கண்களையும் கூரிய நகங்களையும் கூவுகின்ற குரலினையுடைய காக்கைக் கூட்டங்கள் ; கண் அறச் சூழ்ந்து - சிறிதும் கண்ணோட்டமின்றிச் சுற்றிக்கொண்டு ; புகை உடல் புடைத்த விட வினை போல- புகைபோன்ற நிறத்தினையுடைய அதன் உடலைக் குத்திய கொடிய செயல்போல என்க.

     (வி-ம்.) பாசறை - படைவீடு, முனைத்தல் - எதிர்த்தல், முனை - நுனி, அற்றம் - செவ்வி, பெரும்பகல் . நண்பகல், பொதும்பர் - பொந்து, மொத்தை- கோட்டான் ; கூகை, நண்பகலில் கூகைக்குக் கண் தெரியாது. ஆதலால் அதன் பகையாகிய காக்கை அதனைப் பகலிலே வெளியிடங்களிலே காணிற் கொன்றுவிடுதல் இயல்பு இனை,

“பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
 வேந்தர்க்கு வேண்டும் பொழுது ”
(குறள் - 481)

எனவருந் திருக்குறளானும் உணர்க. கொடி - காக்கை, கண் - கண்ணோட்டம், விடவினை - விடம் போன்ற கொடுந்தொழில், விடம் - நஞ்சு.