(வி-ம்.) அளவியன்
மணம்-சாதியானமைந்த கூட்டம். இதனை, அருணி வடவை அத்தினி என்பவை தெரியுங்காலை
அரிவையர் சாதி சசனே இடப னச்சுவனின்றி மகன்மேற் சாதி வகுக்கவும் படுமே என்னும்
இன்பசாரத்தானும் உணர்க. நிலை-அமுதம் நிற்கும் நிலை. காலம்-நாழிகை மாலை முதலியவை.
இவையிற்றை விரிந்த நூல்களால் உணர்க. மன்னுதல் இன்றியும் எனல் வேண்டிய எண்ணும்மை
தொக்கது. உயிர்கள் கருவாகுங் காலம் புல் நுனிமேல் வீழ்ந்த பனித்துளி அளவிற்றா
இருக்கும் என்ப. ஆகலின் இங்ஙனம் கூறினர் என்க.
5:
பீரம்....................................நிலையாது
(இ-ள்) பீரம் மலர்ந்த-பீர்க்கம்
பூவினது நிறம்போலப் பசலை பூத்தற்குக் காரனமாகிய; வயாவுநோய் நிலையாது-வயாவு என்னும்
நோய் உண்டாகாமலும் என்க.
(வி-ம்.) பீர்-பசலை.
வயா-கருக்கொண்டுள்ள மகளிர்க்கு நுகரப்படும் பொருள்களின்மேற் செல்லும் வேட்கைப்
பெருக்கம். வயாவென் கிளவி வேட்கைப் பெருகம் (உரி-73) என்பது தொல்காப்பியம்.
நிலையாதும் என்புழி எண்ணும்மை தொக்கது.
6:
வளை......................................அருந்தாது
(இ-ள்) வளைகாய்விட்ட
புளி அருந்தாது-வளைந்த காயினைத் தோற்றுவித்த புளியமரத்தினது பழத்தினது சுவையை விரும்பி
நுகராமலும் என்க.
(வி-ம்.) வளைகாய்விட்ட
புளி என்பது சினை முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்றதோர் ஆகுபெயர். அருந்தாதும்
எனல் வேண்டிய உம்மை தொக்கது. கருவுற்ற மகளிர் புளிச் சுவையை விரும்புதல் இயல்பு.
7:
செவ்வாய்...........................................பயவாது
(இ-ள்) செவ்வாய்
திரிந்து-இயல்பாகவமைந்த சிவந்தவாய் வேறுபட்டு; கொள்வாய் பயவாது-வெளுத்த வாயாக
உண்டாகமலும் என்க.
(வி-ம்.) செவ்வாய்-கொள்வாய்:
முரணணி. பயவாதும் எனல் வேண்டிய உம்மை தொக்கது.
8-9:
மனை.........................................காணாது
(இ-ள்) மனை புகையுண்ட
கருமண் இடந்து-இல்லத்தின்கண் உண்டாகிய புகை படிந்ததனால் வந்த கரிய மண்ணை அகழ்ந்தெடுத்து;
பவளவாயில் சுவைகாணாது-பவளம் போன்ற வாயினிலிட்டுச் சுவைத்தல் செய்யாமலும் என்க.
(வி-ம்.) மனை-ஈண்டு
மனையின்கண் அடுக்களை. வயாநோய் உடைய மகளிர் புகைபடிந்த கருமண்ணை வாயிலிட்டு சுவைத்தல்
|