இயல்பு. கானாதும் எனல்வேண்டிய
உம்மை தொக்கது. பவளவாய்: உவமைத்தொகை
10-11:
பொற்குடம்........................................கறாது
(இ-ள்) குங்குமக்
கொங்கையும்-குங்குமமணிந்த கொங்கைகள் தாமும்; பொன் குட முகட்டு-பொன்னாலியன்ற
குடத்தின் உச்சியில்; கருமணி அமைத்தென-நீலமணியைப் பதித்து வைத்தாற்போல; தலைக்கண்
கறாது-தம் முச்சியில் அமைந்த கண்கள் கறுக்காமலும் என்க.
(வி-ம்.) முகடு-உச்சி.
கருமணி-நீலமணி. இது முலைக்கண்களுக் குவமை. தலைக்கண்-தம்முச்சியில்லமைந்த கண். கண்-ஈண்டு
முலைக்கண் கருவுற்ற மகளிர்க்கு முலைக்கண் கறுத்தல் இயல்பு. கறாது-ஈண்டும் உம்மைச்
தொக்கது.
11-12:
மலர.......................................குழியாது
(இ-ள்) மலர அவிழ்ந்த
தாமரைக்கயல் என-இதழ்கள் நன்கு மலரும்படி விரிந்த தாமரை மலருன்கண் தங்கும் கயற்கொண்டைகளை
ஒத்த; வரிகொடு மதர்த்த கண் குழியாது-செவ்வரி பரக்கப்பட்டுக் களித்த கண்கள் குழியாமலும்
என்க.
(வி-ம்.) மலர-இதழ்கள்
நன்கு மலரும்படி என்க. தாமரை: ஆகுபெயர். கயல்-ஒரு வகை மீன். முகத்திற்குத் தாமரை
மலரும் கண்களுக்குக் கயலும் உவமை. வரி-செவ்வரி. கருவுற்ற மகளிர்க்கு கண்குழிதல் இயல்பு.
குழியாதும் உம்மை விரிக்க.
14:
குறி...............................புகாது
(இ-ள்) குறிபடு திங்கள்
ஒருபதும் புகாது-கருவுயிர்க்கும் காலம் என்று குறித்தல் பெற்ற தினள் பத்தும் செல்லாமலும்
என்க.
(வி-ம்.)
குறிபடும் என்பதற்குக் கருவுயிர்த்தற்குரிய அடையாளங்கள் தோன்று எனினுமாம். புகாது-ஈண்டும்
உம்மை தொக்கது.
(1) கண்படாமலும் (4)
மன்னுதலின்றியும் (5) நோய் நிலையாதும் (6) புளியருந்தாதும் (7) வெள்வாய் பயவாதும்
(9) சுவைகாணாதும் (11) கண்கறாதும் (12) கண்குழியாதும் (14) ஒருபதும் புகாதும் (17)
பயந்த குழவிக்கு என இயைத்துக் கொள்க.
14-18:
தூணம்.........................................நிமலன்
(இ-ள்) தூணம் பயந்த
மாண் அமர் குழவிக்கு-ஒரு கற்றூண் ஒரு நொடியின் ஈன்ற மாட்சிமை பொருந்திய நரசிங்கமாகிய
குழந்தைக்கு; அரக்கர் கூட்டத்து அமர் விளையாட-அரக்கருடைய குழுவுடனே போர்புரிந்து விளையாடற்
பொருட்டு;
|