(வி-ம்.)
கோளகை-அண்டம். குடில்-சிறுவீடு. சிறுவீட்டினுட் செல்வோர் குனிந்து நுழைதல் இயல்பாகலின்
குனிந்து விலகி என்றாள். அப்புறம்- அண்டகோளகைக்கு அப்பால். உடலெடுத்தல்-தோன்றுதல்.
இஃது இராவணன் எயிற்றுக்குவமை. இருள் எழில் என்புழி எழில் நிறத்திற்காயிற்று.
10-15: அமுதம்.....................புகுந்து
(இ-ள்)
அமுதம் உண்டு இமையாதவரும் மங்கையரும்-அமிழ்தத்தை உண்ணலால் கண் இமைத்தலில்லாத
தேவர்களும் அவர்தம் மகளிரும்; குறவரும் குறவத்துணையரும் ஆகி-குறிஞ்சிநில மாக்களாகிய
குறவர்களும் அவர்தம் வாழ்க்கைத் துணைவியராகிய குறத்தியரும் ஆகி; நிலம்பெற்று இமைத்து-தம்முலகத்தை
விட்டு இந் நிலவுலகத்தே வந்து இமையாத தங்கண்களை இமைத்து; நெடுவரை இறும்பிடை-நெடிய
மலைச்சாரலில் உள்ள சோலையில்; பறவை உண்டு ஈட்டிய இறால்நறவு அருந்தி-வண்டுகள் மலர்தொறும்
சென்று கவர்ந்து சேர்த்த இறாட்டின் கண்ணுள்ள தேனை உண்டு; அ நிலத்தவர் என-அந்தக்
குறிஞ்சிநில மாக்களைப்போல; அடிக்கடி வணங்கும் வெள்ளி அம்குன்றகம் உள்உறப் புகுந்து-இடைவிடாமல்
வணங்குகின்ற சிறப்பினையுடைய வெள்ளி மலையிடத்தே உள்ளே நுழைந்து என்க.
(வி-ம்.)
இமையாமைக்கு அமுதம் உண்ணுதல் குறிப்பேதுவாய் நின்றது. குறவத்துணையர் என்புழிக் குறத்துணை
அத்துச்சாரியை பெற்றதென்க. இனி குறவர்த் துணையர் எனல்வேண்டிய சொற்றொடரின்கண்
ரகரம் ஏடெழுதுவோர் பிழையால் விடப்பட்டது என்று கருதவுங் கூடும். நிலம்பெற்று என்றமையால்
வானுலகத்தை விட்டு என்பது பெற்றாம். தம்மைப் பிறர் ஐயுறாமைப் பொருட்டுக் கண்ணிமைத்து
நறவும் அருந்தினர் என்க. இறும்பு-சோலை. பறவை-ஈண்டு வண்டு. தேனை உண்டுவந்து உமிழ்ந்து
சேர்த்துவைத்தலின் உண்டு ஈட்டிய இறால் எனப்பட்டது. இறால்-இறாட்டு; தேனடை. அந்நிலம்-மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலம். வெள்ளி மலையில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்குதற்
பொருட்டுத் தேவரும் மகளிரும் குறவரும் குறத்தியருமாய் வந்து இடையறாது வணங்கினர் என்பது
கருத்து.
15-23:
ஒரு தேவனும்.........................................அந்தணன்
(இ-ள்)
அதன்முடி ஒருதேவனும் மேவும் உளனாம்-அவ்வெள்ளி மலையின் உச்சியை ஒருகடவுளும் பெரிதும்
விரும்பும் எனவும் மேலும் அவ்வுச்சியின்கண் அக்கடவுள் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும்
எனவும் கேள்வியுற்று; புயங்கொட்டி நகைத்து-தன் தோளைக் கையால் தட்டிச்சிரித்து;
எடுத்து ஆர்க்க-அவ்வெள்ளிமலையைத் துக்கி ஆரவாரிக்க, அங்ஙனம்
|