காரணமான சூண்மொழி
கூறுவித்தும்; பொருள்காண் தடைந்தும்- பொருளீட்டற்குக் காட்டுவழியிலே போகாமல் தடுத்தும்
என்க.
(வி-ம்.)
துவளுதல்-புரளுதல். தொங்கல்-மாலை. தைவரல்-வருடுதல். தடைதல்-தடுத்தல். கடற்றெய்வம்-வருணன.்
தெளிசூல்: வினைத்தொகை. பொருளிற்கு என நான்கனுருபு விரிக்க.
22-26:
பாசறை.........................இவட்கு
(இ-ள்)
பாசறை பொருந்தியும்-அவன் போர் மேற்கொண்டு பாசறைக்குச் சென்ற போது ஆற்றியிருந்தும்;
போக்கு அருஞ்சுரம்-ஊடு போதலரிய பாலை நிலத்தில்; போக-அவன் செல்லத் துணிந்த பொழுது;
முன் இறந்தும்- போகுமுன்பே சாக்காடென்னும் மெய்ப்பாடெய்தியும்; காவலில் கவன்றும்-
அவன் நாடுகாத்தற் பொருட்டுப் பிரிந்த பொழுது பெரிதும் கவலைப்பட்டிருந்தும்; கல்வியில்
கருதியும்-அவன் ஓதற் பொருட்டுப்பிரிந்த பொழுது அவனையே நினைந்திருந்தும்; வேந்து
விடைக்கு அணங்கியும்- முடிவேந்தனால் தூதுவிட்ட காலை அவன் பிரிவுக்கு வருந்தியும்; விளை
பொருட்கு-அறம் விளைதற்குக் காரணமான பொருட்பிரிவின்கண்; உருகியும்- மனமுருகி இருந்தும்;
நின்ற இவட்கு, இங்ஙனமாகத் தனது கடமையிலே நிலைத்துநின்ற எம்பெருமாட்டிக்கு என்க.
(வி-ம்.)
பாசறைக்குச் சென்றபோது அதற்கிணங்கி ஆற்றியிருந்தும் என்க. சுரம்-பாலைவழி. இறத்தல்,
சாக்காடென்னும் மெய்ப்பாடுறுதல்; அதாவது மூர்ச்சித்து விழுதல். காவல்-நாடு காத்தல்.
கல்வி-ஓதற்பிரிவு. விடை- தூதுவிடுத்தல். இவள் என்றது தலைவியை.
26-27:
இனி..............................உயிரே
(இ-ள்)
கன்றிய உடலுள்-இவ்வாறெல்லாம் பொறுத்துப் பொறுத்து முன்னரே நொந்திருக்கின்ற உடம்பினுள்ளே;
படும் நனி உயிர்-இருக்கின்ற சிறிய வுயிர்; இனி என் ஆம்-இப்போது யாதாய் முடியுமோ;
யான் அறிகின்றிலேன் என்க.
(வி-ம்.)
பாசறைப்பிரிவும் நாடுகாவற் பிரிவும் ஓதற்பிரிவும் தூதுபோதற் பிரிவும் பொருட்பிரிவும்
அறங்கருதிய பிறிவுகளாதலின் அவற்றைப் பொறுத்திருத்தல் தலைவிக்குக் கடனாயிற்று.
பரத்தையிற் பிரிவு அறத்தொடுபடாத பிரிவாகலின் இப்பிரிவினை இவள் பொறாள்; இறந்துபடுவள்
என்பாள் இவள் உயிர் இனி என்னாம்? என்றாள்.
அவளெய்தும்
பிரிவுத் துன்பம் நோக்குழி அவள் உயிர் ஆற்றவுஞ் சிறிது என்றிரங்குவாள் நனியுயிர்
என்றாள். ஈண்டு நனி சிறுமை
|