யின் மிகுதி குறித்து
நின்றது. இறந்துபடுவள் என்பது குறிப்பெச்சம்.
இனி,
இதனை, கருணைச் செல்வியாகிய திருவயிற்றினள் ஒருபாற் பொலிந்த கூடற் பெருமானது கழல்
நினையார்போல் பொய்ம்மொழி புகன்ற ஊரன் தகாத வில்லிடத்தே புகுதலால் என்னுளம்
அனற்புக்க முளரியின் மாழ்கின என்றால், அவ்வூரன் பிரியாத காலத்தில் துவண்டும் மறைந்தும்
ஏற்றும் தடைந்தும் வாங்கியும் நின்றாற்போலப் பிரிந்த காலத்தில் தடைந்தும் பொருந்தியும்
இறந்தும் கவன்றும் கருதியும் அணங்கியும் உருகியும் நின்ற இவட்குக் கன்றிய உடலுள்ளே
சிறிய வுயிர் என்னாகுமென வினைமுடிவு செய்க.
மெய்ப்பாடும்
பயனும் அவை.
|