பக்கம் எண் :

மூலமும் உரையும்637



நீங்க-அந்நரி இறந்ததாகக் கருதி அவ்வுரிமையாளர் போக; ஓட்டம் கொண்டன கடுக்கும்-எழுந்து ஓடிப்போனதை ஒக்குங் காண்; நாட்டவர் தடைய-இவ்வூரார் தடுகவும்; உதிர்த்து நடந்தது-அவர்களை விலக்கிக்கொண்டு அப் பானன் ஓடிப்போன செயல் என்க.

     (வி-ம்.) உடையோர்-தோட்டத்தையுடயவர். திமிர்த்தல்-புடைத்தல். உயிர்ப்பு-மூச்சு. ஒடுக்குதல்-அடக்கிக் கொள்ளுதல். அவர்-அவ்வுரியவர். கொண்டன என்புழி ஒருமை பன்மை மயக்கமாகக் கொள்க. கடுத்தல்-ஒத்தல். தடைய-தடுக்க.

     இதனை, தாமரை குவித்த காமர் சேவடித் திருவினளே ஒருநகை அரிதினிற் கேண்மோ, கூடற்கிறைவன் நடங்குறித்த நம் பொருபுனலூரனை எமக்குத் தங்கையைப் பாண்டொழிற் புல்லன் புணர்த்தினனென்று எங்கையர் குழுமி யிவனைக் கோலிற் கரத்திற் றோலிற் புடைப்பப் படர்காய்க் கணைந்த குறுநரி யுடையோர் திமிர்ப்ப உயிர்ப்பொடுக்கி யுயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க ஓட்டங் கொண்டன. கடுக்கும் நாட்டவர் தடைய உதிர்த்து நடந்த தென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-நகை. பயன்-பாணனை இகழ்தல்.