பக்கம் எண் :

64கல்லாடம்[செய்யுள்6]



தலைவன் இக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் மறவன் புகழை ஓதி யுணர்ந்து மகிழ்ந்து பின் அப்பால் சென்றிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கின்றாள் என்க.

9-11: துணை........................................இதுவே

     (இ-ள்) துணைவிளக்கு எரியும் நிலைவிழிப்பேழ்வாய்-இரேட்டை விளக்கு எரிந்தாற்போலக் கனலுகின்ற நிலைமையினையுடைய விழிகளையும், பெரிய வாயினையும்; மாண்புடைக்கும் காய்புலி மாய்க்க-தம்மைச் சினந்து வந்த புலியைக் கொல்லும் பொருட்டு; வாய் செறித்திட்ட மாகடிப்பு இது-அதனது வாயினுள்ளே செருகிய பெருங்கடிப்பு இதுவாகும் என்க.

     (வி-ம்.) புலியினது இரண்டு கண்களுக்கும் எரிகின்ற நிலையிலுள்ள இரட்டை விளக்குகள் உவமை. பேழ்-பெரிய. தோகை-வால். ஆலைக்கண்டு புலி தன் வாலைச் சுழற்றி நிலத்தில் புடைத்தல் இயல்பு. மறவர்கள் பெருங்கடிப்பு என்னும் கூர்ந்த தடியினால் தன் மேலே பாயும் புலியின் பிளந்த வாயினுள் குத்திக் கொல்லுதல் வழக்கம். செவிலி பாலை நிலத்தில் குருதி தோய்ந்து கிடந்த பெருங்கடிப்பு ஒன்றினைக் கண்டு இது தலைவன் தன்மேற் பாய்ந்த புலியைக் குத்திய கடிப்பு என்று ஊகிக்கின்றாள். குத்துண்ட புலி உய்ந்து ஓடிப்போய்ப் பின்னர் வேடர்களால் கொலையுண்டமை இனிக் காண்க.

     (வி-ம்.) இந்நிலை-இவ்விடம். இந்நிலை மகிழ்வுழி எனமுடித்துக் கொள்க. உழி-இடம். இதனால் செவிலி அப்பாலையின்கண் சிறிது தூரம் அடியொற்றிச் சென்று ஓரிடத்தே நிலைத்து நின்ற சுவடுகளைக் கண்டும் சிறிது சேய்மையில் வேடர் அடிகலையும் புலியின் அடிகளையும் குருதி முதலியவற்றையும் கண்டும் இவ்வாறு ஊகிக்கின்றாள் என்பது உணரலாம்.

14-15: தவநிதி........................................இவ்வுழை

     (இ-ள்) இவ்வுழை-இவ்விடம்; தவம் நதி போகும் அருமறைத் தாபதர்-தவத்தை மேற்கொண்டு புண்ணிய நீரில் ஆடுதற்குச் செல்லும் உணர்தற்கரிய மறைகளையுணர்ந்த துறவோர்கள்; நன்னர்கொள் ஆசி நாட்டியது-எம்மகளும் அவள்