கணவனும் கைகுவித்து வணங்கியபொழுது
அவ்விருவரையும் நன்மையைக் கொண்டுள்ள மொழிகளைக் கூறி வாழ்த்திய இடமாம் என்க.
(வி-ம்.) தவம்-தவவொழுக்கம்;
நதிபோகும்-நதியில் ஆடப்போகும், நதியில் ஆடுதலும் தவமாதலின் தவநதி போகும் தாபதர்
என்றாள். இதனை,
நாலிரு
வழக்கிற் றாபதப் பக்கமும் |
எனவரும் (தொல். புறத்.
20) சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டாக வரும்,
நீர்பலகான்
மூழ்கி நிலத்ததைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி (பு-வெ-வாகை.14)
|
எனவரும் புறப்பொருள்
வெண்பா மாலையானும் உணர்க, ஈண்டும் அடிகள் பலவற்றைக் கண்ட செவிலி இங்ஙனம் ஊகிக்கின்றாள்
என்று கொள்க.
16-22;
கறை......................................இதுவே
(இ-ள்) இது கறை அணல்
புயங்கன் எரிதழல் விடத்தை-இவ்விடம் கறுப்பினையுடைய கீழ்வாயினையுடைய பாம்பினது
எரிகின்ற தீப்போன்று கொல்லும் நஞ்சினை; மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்-மலையின்கண்
மறைந்துள்ள மருந்து மாற்றி விடுகின்ற அச்செயல் போல; சிற்றிடை பெருமுலை பொன்தொடி
மடந்தை-சிறிய இடையினையும் பெரிய முலையினையும் பொன்னானியன்ற தொடியினையுமுடைய என்மகள்,
தன் கவைஇய கற்பினை-தன்னிடத்துண்டாகிய கற்பை; ஆறு இடை கவற-வழியிலே கவர்ந்து கொள்ளும்
பொருட்டு; எண்ணாது கிடைத்த கொடு மறக் கொலைஞர்-ஆராயாது வந்து எதிர்ந்த கொடிய
பாவமாகிய கொலைத் தொழிலையுடைய கள்வருடைய; புண் எழுசெரு நிலை கைவளர் கொழுந்து-புண்
உண்டாதற்குக் காரணமாகிய போர்க்களத்தின்கண் தொழில் வன்மை மிகுந்த தலைப்படையினரது;
மெய்பொடியாகக் காட்டுழி-உடல்கள் துகளாகும்படி மெய்ப்பித்துக் காட்டிய இடமாகும் என்க,
(வி-ம்.) இதன்கண்
தலைவனும் தலைவியும் போகும் பொழுது நம்பி பலராகிய ஆறலை கள்வர்களைக் கொன்றான்
என்றும், தமியனாகிய அந்நம்பி கூட்டமாகிய அக்கள்வரைக் கொன்றொழித்தமைக்குக்
காரணம் என் மகளின் கற்புடைமையே என்றுஞ் செவிலி ஊகித்து மகிழ்கின்றாள் என்க,
அறத்தில் தலைசிறந்த கற்புடைமையின் முன்
|