பக்கம் எண் :

4. மாயாவாதி நிராகரணம்1185


65 பரத்தில தேல்ஒழி முன்பகர் மாற்றம்
அதன்முதல் இதுவென உதவுக அன்றியும்
70 விவகரிக் குங்கால் திகழ்பர மார்த்த
நிலைஅது தெரியின் இதுநீ நீயேல்
தெரியா தாயின் அஃதுந் தெரியாது
உரையார் அளவையும் ஒழிந்தனை அன்றே
அளவை காண்டல் கருதல் உரையென

பரத்திலதேல் - உலகம் பொய்யாயிருந்தபடியாலே இது அந்தப் பரமார்த்
தத்துக்குப் பணியல்லவென்னில்; ஒழி முன்பகர்மாற்றம் - உலகம் பிரமத்திலே
நின்றுந் தோன்றிற்றென்று நீ முன்னே சொன்ன வார்த்தையை ஒழிந்து
விடுவாயாக; அதன்முதல் இதுவென உதவுக - இந்த உலகம் பிரமத்திலே
தோன்றின தல்லவாயின் அது தோன்றின உபாதானம் உனக்குத் தெரியுமாயின்
இன்னதென்று சொல்லுவாயாக; அன்றியும் விவகரிக்குங்கால் திகழ் பரமார்த்த
நிலை அது - இந்தத் தோல்வியன்றியும் இன்னமுஞ் சொல்லுமிடத்து,
நின்மலமாய் எல்லா உபாதிகளையுந் கழன்ற பரமார்த்த நிலையாயிருப்ப
தொன்று அந்தப் பிரமம்; தெரியில் இது நீ - விசாரித்துப் பார்க்குமிடத்து
மலமாயிருக்கிற இந்த மாயாவுபாதிகளோடுஞ் சம்பந்தியாயிருப்பா னொருத்தன்
நீ, ஆகையால் இந்தச் சீவனுந் தனியே ஒரு முதலென்; நீயேல் - அந்தப்
பிரமந்தான்காணும் நானென்னில் அது அறிவாயிருக்கிறது, இது அறியாம
லிருப்பானேன்; தெரியாது - இது உபாதிகள் வசத்தினாலே தெரியா
மலிருக்கும்; ஆயின் அஃதுந் தெரியாது - நீயும் அந்தப் பிரமமும் ஒரு
முதலாயிருக்கச்செய்தே இது உபாதிவசத்தினாலே அறியாதிருக்குமாயின்;
அந்தப்பிரமமும் அறியாததாகவேண்டும்; உரையார் அளவையும் ஒழிந்தனை
யன்றே - உன்னுடைய அர்த்தத்தை அளவிட்டுச் சொல்லிவருகிற
பிரமாணத்தையும் விட்டுவிட்டாய். அதென்னெனில் அது ஒன்றைச்சொல்ல நீ
ஒன்றைச் சொல்லுகையால். அந்தச் சாத்திரத்தின்படியே காணும் நான்
சொன்னதுமென்னில்; அளவை காண்டல் கருதல் உரையென உளது -
பிரமாணமாவது பிரத்தியக்ஷ மென்றும் அனுமானமென்றும் ஆகமமென்றும்
மூன்று வகைப்படும்; அவை மூன்றின் மொழிவழி நுழையின் நின்
பிரமேயமென்பது