பக்கம் எண் :

1186சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

  உளதவை மூன்றின் மொழிவழி நுழையின்
நின்பிர மேயம் என்பதெ னாம்கொல்
பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னே யாம்நின்
தற்பரம் அசித்தைத் தருமா றென்னெனச்
75 சிலம்பி நூல்தரு நலம்போற் றோன்றும்
என்றனை அதுவும் தன்தொழில் அன்றியும்
ஒன்றதன் இயல்புல கோரியல் பன்றெனப்
பலமிலை பழம்பூப் பாதவந் தரும்நீர்

எனாம் கொல் - அங்ஙனஞ் சொல்லப்பட்ட பிரத்தியக்ஷத்தின் வழியாலும்
அனுமானத்தின் வழியாலும் ஆகமத்தின் வழியாலும் நுழைந்து ஒன்றை
யறிந்துகொண்டுவருமாயின் வாக்குக்கும் மனத்துக்கு மெட்டாத உன்னுடைய
பிரமேயமென்று சொல்லப்பட்டது என்னமாய் முடியும். இது பிரமேயத்தை
மறுத்தது.

     மேல் சித்தினிடத்து அசித்துத் தோன்றுமென்றதனை மறுக்கிறார்;
பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னேயாம்நின் தற்பரம் அசித்தைத் தருமாறு
என்னென - பொன்னும் பணியும்போலப் பிரமமும் பிரபஞ்சமு மென்றாய்,
பணியானது பின்பு பொன்னோடு கூடப் பொன்னாய் நின்றது கண்டோம்,
பிரபஞ்சமானது பின்பு பிரமத்தோடு கூடிப் பிரமாய் நின்றது கண்டோ
மில்லை. ஆகையால், உன்னுடைய அந்தச் சத்தாயுள்ள பிரமம் அசத்தா
யுள்ள பிரபஞ்சத்தைத் தந்த பிரகாரம் எப்படியென்று நான் முன்னே உன்
மதத்திலே கேட்டபொழுது; சிலம்பி நூல் தரும் நலம்போல் தோன்றும்
என்றனை - சித்தாயுள்ள சிலந்தி சடமாயுள்ள நூலைத் தந்த தன்மைபோலுஞ்
சித்தாயுள்ள பிரமத்திலே சடமாயுள்ள பிரபஞ்சம் தோன்றிற்றென்று
சொன்னாய்; அதுவும் தன்தொழில் - அந்த நூலை அனவரதமுந் தோற்று
வித்துக்கொண்டு நிற்கிறது அந்தச் சிலந்திக்குள்ள தொழில்; பிரபஞ்சம்
பிரமத்திலே நின்று ஓர் அவதரத்திலே தோன்றுமதொழிந்து அனவரதமுந்
தோன்றிக்கொண்டு நில்லாது; அன்றியும் ஒன்று அதன் இயல்பு உலகு ஓர்
இயல்பன்று என - அதன்றியும் சிலந்தியினிடத்திலே தோன்றின நூல் ஒரு
தன்மையாகக் காணப்பட்டது, பிரமத்தினிடத்திலே தோன்றின பிரபஞ்சம் ஒரு
தன்மையாகக் காணப்பட்டதில்லை யென்று நான் முன்னே சொன்னபொழுது;
பலம் இலை பழம் பூ பாதவம்