| 80 | திரை நுரை திவலை சிலதரும் இவைபோல் தானே பலவாம் எனநீ சாற்றினை | 85
| சத்தசத் தாகவும் சத்தினில் அசத்தின் கொத்துள தாகவும் கூறினர் இலரால் வித்திலை கனிநனி விழுதால் தருநெறி சத்தல தொன்று தான்தர வேண்டும் நெற்பதர் பலாலத் திற்குபா தானம்என் காரண மின்றிக் காரியம் பிறவா | தரும் நீர் திரை நுரை திவலை சில தரும் இவைபோல் தானே பலவாம் எனநீ சாற்றினை - காயையும் இலையையும் பழத்தையும் பூவையும் மரமானது தந்த தன்மைபோலவும் திரையையும் நுரையையுந் திவலையையும் குமிழி யையும் நீரானது தந்த தன்மைபோலவும் பிரமந்தானே பலவிதமாயுள்ள பிரபஞ்சமா யிருக்குமென்று உன் மதத்திலே நீ சொன்னாய்; சத்து அசத்தாகவும் சத்தினில் அசத்தின் கொத்துளதாகவும் கூறினர் இலரால் - ஆல்அசை. அறிவாயுள்ளது அறியாமையாயிருக்குமென்றும் அறிவினிடத்திலே அறியாமையினது கூட்டங்கள் தோன்றுமென்றும் நீ சொன்ன இந்த மலைவு புத்தர் சமணர் முதலானவர்களுஞ் சொல்லார்கள். பின்னை இந்தப் பிரபஞ்சம் தோன்றினபடி எப்படி யென்னில்; வித்து இலை கனி நனி விழுது ஆல் தரு நெறி சத்தல தொன்று தான் தர வேண்டும் - சூக்குமமாயுள்ள வித்தானது இலையையும் பழத்தையும் மிகுதியாயுள்ள விழுதையுமுடைய தூலமாகிய ஆலமரத்தைத் தந்த தன்மைபோலத் தூலமாய்ப் பலவாயிருக்கிற பிரபஞ்சத்தையும் சூக்குமமாய் அசத்தாயிருக்கிறதோர் உபாதானம் தந்ததாக வேண்டும். அப்படியன்று காணும், நெல்லிலே நின்றும் வைக்கோலும் பதரும் தோன்றினாற்போலச் சித்திலேநின்றும் சடமான பிரபஞ்சந் தோன்றுமென்னில்; நெற்பதர் பலாலத்திற்கு உபாதானம் என் - நெல் சூக்குமமாய்ச் சடமா யிருக்கையால் அது வைக்கோலுக்கும் பதருக்கும் உபாதானமென் றறிவாயாக; காரணமின்றிக் காரியம் பிறவா - ஆகையால் தனதாவுடைய காரணத்தில் நின்றுங் காரியந் தோன்றும தொழிந்து அன்னிய காரணத்திலே நின்றுங் காரியங் தோன்றாது. அப்படித் தோன்றுமென்பை யாகில்; |