பக்கம் எண் :

1188சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

  பாரிடை ஒருபடம் பண்ணவும் படுமே
அந்தமில் பிரமம் அவித்தைகா ரணமெனத்
தந்தனை அவித்தை தானெய் துறுதல்
90 தன்னியல் பென்னில் வன்னிதன் வெம்மையிற்
சத்தின தியல்புஞ் சத்தே அசத்தெனில்
வைத்ததன் இயல்பெனும் வழக்கொழி அன்றியும்
இருள்பொதி விளக்கென வரும்இரு விளக்கிற்
கருமை பயந்த பெருகொளி தகுமெனில்

பாரிடை ஒரு படம் பண்ணவும் படுமே - பருத்தி காரணமாகப் புடைவை
யுண்டாவ தொழிந்து மண் காரணமாகப் புடைவை பண்ணவும் வேண்டும்,
ஆகையாற் சடங்காரணமாகச் சடமுண்டாவ தொழிந்து சித்துக் காரணமாகச்
சடமுண்டாகாது. இப்படி யிருக்கச்செய்தே நீ ; அந்தமில் பிரமம் அவித்தை
காரணமெனத் தந்தனை - சடமாய் அழிந்துபோவதா யிருக்கிற தேகாதிப்
பிரபஞ்சத்துக்குச் சித்தாய் அழிவில்லாம லிருப்பதாகிய பிரமம் காரணமென்று
நீ சொன்னாய்; அவித்தை தானெய்துறுதல் சித்தாயுள்ள பிரமத்திலே
சடமாயுள்ள பிரபஞ்சம் தோன்றவேண்டுவானேன்; தன் இயல்பு என்னில் -
இந்தப் பிரபஞ்சம் உண்டாகிறது அந்தப் பிரமத்துக்கு இயல்பா யிருப்ப
தொன்றென்று நீ சொல்லில்; வன்னிதன் வெம்மையிற் சத்தின தியல்புஞ்
சத்தே - அக்கினிக்கு உட்டணம் இயல்பானாற்போல நீ சித்துக்கு இயல்
பென்று சொன்னபிரபஞ்சமுஞ் சித்தேயாகவேண்டும்; அசத்தெனில் -
பிரபஞ்சத்தைச் சடமென்னில்; வைத்த தன் இயல்பெனும் வழக்கு ஒழி
சத்தாக வைக்கப்பட்ட பிரமத்தினுடைய இயல்பு இந்தப் பிரபஞ்சமென்று
சொன்ன வழக்கை விடுவாயாக; அன்றியும் இருள்பொதிவிளக்கென வரும் -
இந்தக் குற்றமன்றியுஞ் சித்தாயுள்ள பிரமத்துக்குச் சடமாயுள்ள பிரபஞ்சம்
இயல்பென்று நீ சொல்லுகிறது பிரகாசமாயுள்ள விளக்கு இருளானதைப்
பொதிந்துகொண்டு நின்ற தென்றதை யொக்கும். அப்படியன்று காணும்; இரு
விளக்கிற் கருமை பயந்த பெருகொளி தகுமெனில் - பெரிய விளக்கினிடத்
துண்டாகிய மிக்க பிரகாசமானது கறுத்த மையைத் தந்த தன்மையை
யொக்கும், சித்தாயுள்ள பிரமம் சடமாயுள்ள பிரபஞ்சத்தைத்