| 95 | தன்னியல் 1பன்றென் உபாதி வசத்தால் மன்னிய தன்றிமைத் தான்தனின் மாயாது ஒன்றா னசுத்த னன்றா மன்றே ஆங்கொரு காலத் தோங்கிய தாயின் அந்தமில் அவித்தை வந்தணை வதற்கோர் | | 100 | ஏது வேண்டும் புயலியல் பெனின்வீடு ஓத வேண்டா ஒழிந்தோ ரினுமுறும் களங்கம தறஉறும் அவித்தைதற் கவித்தல் | தந்ததென்று நீ சொல்லில்; தன் இயல்பு அன்று என் உபாதி வசத்தால் மன்னியது - அங்ஙனம் விளக்கினிடத்திலே கறுத்தமையானது தோன்றினது விளக்கினுடைய இயல்பல்ல என், திரியென்றும் நெய்யென்றுஞ் சொல்லப்பட்ட உபாதிகள் வசத்தினாலே மையென்று நிலைபெற்றதென்று கொள்; அன்றி மைத் தான் தனின் மாயாது - அதன்றியும் பிரமத்திலே தோன்றின பிரபஞ்சம் மீளவும் பிரமத்திலே ஒடுங்காநிற்கும். விளக்கினில் தோன்றின மையானது மீள அந்த விளக்கிலே சென்றொடுங்காது. இதன்றியும்; ஒன்றான் அசுத்தனன்றா மன்றே - இந்தப் பிரமமென்று சொல்லப்பட்ட ஒப்பில்லாதவன்தான் சுத்த னொழிந்து அசுத்தனா யிருப்பானொருத்த னல்லவே. அப்படி யிருக்கச் செய்தே இந்தப் மாயாவுபாதிகளோடுங் கூடியிருக்க வேண்டுவானேன்; ஆங்கு ஒரு காலத்து ஓங்கியதாயின் - அந்தப் பிரமத்தினிடத்திலே ஓர் அவதரத்திலே இந்த உபாதிகள் வந்து கூடினதாயின்; அந்தமில் அவித்தை வந்து அணைவதற்கு ஓர் ஏது வேண்டும் முடிவில்லாத இந்த மாயாவுபாதி ஓர் அவதரத்திலே பிரமத்தை வந்து கூடுதற்கு முன்னே ஒரு காரணம் உண்டாகவேண்டும்; புயலியல்புஎனின்-நின்மலமாயிருக்கிற ஆகாசத்தை மேகமானது வந்து மறைத்த தன்மைபோலச் சுத்தமாயுள்ள பிரமத்தையும் மாயாவுபாதிகள் இயல்பாக வந்து கூடுவதொழிந்து இதற்கு ஒரு காரணம் வேண்டுவதில்லையென்னில்; வீடு ஓதவேண்டா - இந்த உபாதிகள் இயல்பாக வந்து பொருந்தின் மோட்சமென்று சொல்லவேண்டுவதில்லை. அதே னென்னில்; ஒழிந்தோரினும் உறும் - எல்லா உபாதிகளையும் நீக்கிப் பழையசுத்தத்தைக் கூடினவர்களிடத்தும் இந்தஉபாதிகள் இயல்பாகவந்து பொருந்தும். அப்படியன்று காணும்; களங்கமது அற உறும்
1. பன்றதன் - பாடபேதம். |